‘பிரசவத்தின்போது நடிகைக்கு நேர்ந்த பயங்கரம்’.. ‘சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காத அவலம்’..
முகப்பு > செய்திகள் > இந்தியாபிரசவத்தின்போது ஆம்புலன்ஸ் தாமதமாக கிடைத்ததால் மராத்தி நடிகை பூஜா ஸுஞ்சார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மராத்தி படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளவர் பிரபல நடிகை பூஜா ஸுஞ்சார் (25). நிறைமாத கர்ப்பிணியான இவர் தனது சொந்த ஊரான மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு நேற்று அதிகாலை பிரசவ வலி எடுக்க, உடனடியாக கோரேகானில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு குழந்தை பிறந்து சில நிமிடங்களிலேயே இறந்துள்ளது.
அடுத்து சில நிமிடங்களிலேயே பூஜாவின் உடல்நிலையும் மோசமாக, அங்கிருந்த மருத்துவர்கள் அவரை ஹிங்கோலி சிவில் ஹெல்த் செண்டருக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர். ஆனால் அவசரத்துக்கு ஒரு ஆம்புலன்ஸ் கூட கிடைக்காத நிலையில் நீண்ட நேரத்திற்கு பிறகு தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று கிடைத்துள்ளது.
பின்னர் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைத்திருந்தால் பூஜா உயிர் பிழைத்திருப்பார் என அவருடைய உறவினர்கள் வேதனையோடு தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பிறந்ததும் பால் கொடுத்துவிட்டு, துணியால் இறுக்கி’.. ‘பையில் இறந்த குழந்தையுடன் சுற்றிய’.. ‘இளம்பெண்ணின் அதிரவைக்கும் வாக்குமூலம்’
- '2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை'.. அலறித்துடித்த பெற்றோர்!.. 'பதற வைக்கும்' வீடியோ!
- ‘பேரக்குழந்தைகளுடன் வெளியே சென்றபோது நடந்த பயங்கரம்’.. ‘அதிவேகத்தில் வந்த காரால் கோர விபத்து’..
- ‘இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி கோர விபத்து’.. ‘பள்ளிக்குக் கிளம்பிய சிறுவனுக்கு வழியில் நடந்த பயங்கரம்’..
- பேருந்தும் லாரியும் ‘நேருக்கு நேர்’ மோதி கோர விபத்து.. ‘நொடியில் தீப்பிடித்ததால்’.. வெளியேற முடியாமல் ‘35 பேர் பலி’..
- ‘கண் இமைக்கும் நேரத்தில்’.. ‘எங்கிருந்தோ பறந்து வந்து’.. ‘காரைத் துளைத்த கல்லால் நடந்த பயங்கரம்’..
- ‘சுற்றுலா சென்ற இடத்தில்’.. ‘வேன் கவிழ்ந்து’.. ‘நொடிப்பொழுதில் நடந்து முடிந்த கோர விபத்து’..
- ‘பேருந்து கவிழ்ந்து’.. ‘நொடியில் நடந்த கோர விபத்தில்’.. ‘14 பேர் பலி; 98 பேர் பலத்த காயம்’..
- ‘சாலையில் சென்ற கார்கள் மீது’.. ‘நொடியில் மேம்பாலம் இடிந்து விழுந்து கோர விபத்து’..
- ‘பயங்கர விபத்தில்’.. ‘பயிற்சிக்காக வெளிநாடு சென்ற’.. ‘ஐடி பெண்ணுக்கு நடந்த விபரீதம்’..