'இழுத்து மூடுங்க!'.. மாவட்ட நிர்வாகத்தின் 'அதிரடி உத்தரவால்'.. நித்யானந்தா ஆசிரமத்துக்கு வந்த சோதனை!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுஜராத் மாநிலத்தின் ஹீராபூரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தை, அம்மாவட்ட நிர்வாகம் மூடியுள்ளது. மேலும் ஆசிரமத்தில் தங்கியிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆசிரமத்தின் மீதான தொடர் புகார்களைத் தொடர்ந்து அம்மாவட்ட நிர்வாகம் இத்தகைய நடவடிக்கையை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. முன்னதாக தனியார் பள்ளிக்குச் சொந்தமான இடத்தில் இந்த ஆசிரமம் செயல்பட்டதாக புகார் எழுந்திருந்தது.
வெளிநாட்டுத் தீவுகளில் வசித்து வரும் நித்யானந்தா நேற்றுதான், சமஸ்கிருதத்தை சத்தியத்தைப் பேசவும், தமிழை பொதுவெளியில் பேசவும் பயன்படுத்த வேண்டும் என்று புதிய சத்சங்கத்தை வீடியோ வாயிலாக தெரிவித்து சர்ச்சையை கிளப்பியிருந்தார்.
இந்த நிலையில், ஆசிரம பதிவு மற்றும் அனுமதி உள்ளிட்ட மற்றும் பல நடைமுறை விதிகளை பின்பற்றாமல் விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டது தொடர்பான புகார்கள் எழுந்தாகவும், அந்த புகார்களின் அடிப்படையிலேயே இந்த ஆசிரம முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'லேட் நைட்ல திடீர்னு எழுப்பி.. நகையெல்லாம் போட்டு டான்ஸ் ஆடச்சொல்லி.. வீடியோ எடுத்து..!'.. மீட்கப்பட்ட சிறுமி பகீர்!
- 'இடம் கொடுத்த பள்ளி முதல்வர் மீது பாய்ந்த சட்டம்'.. ஆசிரம நிர்வாகிகள் கைது!.. 'தப்பியோடினாரா நித்தி?'...
- 'தியானம் இன்னும் முடியலே.. சூரியனை 40 மினிட்ஸ் லேட்டா உதிக்கச் சொல்லி ஆர்டர் போட்டேன்'.. 'வேற லெவல்'.. வீடியோ!