‘குழந்தை இல்ல, அதனால’... 'உருக்கமான கடிதம் எழுதிவிட்டு'... 'இளம்தம்பதி எடுத்த விபரீத முடிவு'!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுழந்தை இல்லாததால் உதவி பேராசிரியர் ஒருவர், உருக்கமான கடிதம் ஒன்று எழுதிவைத்துவிட்டு, தனது மனைவியுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 38 வயதான ஆர்.ஜெயபாலன் ஒடிசா மாநிலத்தின் ரூர்கேலாவில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு மாலினி என்ற மனைவி இருந்தார். இவர்கள் இருவரும் ரூர்கேலாவில் உள்ள என்.ஐ.டி. கல்லூரி குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு திருமணமாகி சுமார் 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. இருப்பினும் இத்தம்பதியினருக்கு குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக ஜெயபாலன் வீடு உட்பக்கமாக பூட்டி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கடந்த சனிக்கிழமையன்று காலை, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அங்குள்ள குளியல் அறையில் ஜெயபாலனும், படுக்கை அறையில் அவரது மனைவி மாலினி கேசவன் இறந்து கிடந்தனர். இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பேராசிரியர் ஜெயபாலன் வீட்டில் 4 பக்க அளவில் ஒரு கடிதம் கிடைத்தது. அந்த கடிதத்தில், “தங்கள் இறப்புக்கு யாரும் காரணம் இல்லை. குழந்தை இல்லாத ஏக்கத்தில், நாங்கள் தற்கொலை செய்துகொண்டோம். தங்கள் பெற்றோர் இந்த முடிவுக்காக தங்களை மன்னிக்க வேண்டும் என்று எழுதியிருந்தது’ என்று போலீசார் கூறியுள்ளனர். மேலும் இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம் என்று ரூர்கேலா எஸ்.பி சர்தாக் சாரங்கி தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சைக்கோ கில்லரின்' டார்கெட் இவங்க மட்டும் தான்'... 'உஷாரா இருங்க'... சைக்கோவை தேடும் போலீஸ்!
- 'ஒன்றரை வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்'... 'பதறவைத்த சம்பவம்'!
- 'வீட்ல போய் ஆடுங்க.. போங்க'.. குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் 'டிக்டாக்' டான்ஸ் ஆடிய நர்ஸ்களுக்கு கட்டாய விடுப்பு!
- ‘வேறு சாதி பையனை காதலித்ததால் ஆத்திரம்’... ‘கிராம மக்கள் ஒன்றுகூடி செய்த அதிர்ச்சி சம்பவம்!
- ஓடும் ரயிலில் இறங்கும்போது தடுக்கி விழுந்த பயணி..! அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ காட்சி..!
- ‘ஓடும் ரயிலில் கால் தவறி விழுந்து சிக்கிய நபர்’.. நெஞ்சை பதைக்கும் சம்பவம்!
- ‘17 வயது பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர்..’ ஒருதலைக் காதலால் நடந்த விபரீதம்..
- 'இது எங்க கலாச்சார உரிமை.. திணிக்காதிங்க'.. பழங்குடி பேராசியரின் 2017 பேஸ்புக் பதிவுக்கு இப்போ FIR!
- ‘அட இப்டியும் ஒரு எம்.பியா’?.. ‘ஆச்சரியமூட்டும் எம்.பியின் செயல், பாராட்டும் மக்கள்’!
- 'இந்த சின்ன வயசுல' எம்.பி ஆகி அரசியல் பொறுப்புடன் மக்களவைக்கு செல்லும் முதல் பெண்!