'2 நாளுக்கு யாரும் வெளியே வராதிங்க...' 'கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்...' '138 ஆண்டுகளுக்கு' பின் 'மும்பையை' தாக்கும் 'புயல்'...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

'தென் மேற்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள 'நிசர்கா' புயல் இன்று பகல் மஹாராஷ்டிரா மற்றும் குஜாராத் இடையே கரையை கடக்க உள்ளது. 138 ஆண்டுகளுக்குப் பின் ஒரு புயல் மும்பையை தாக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

பொதுவாக அரபிக்கடலில் உருவாகும் புயல் படிப்படியாக நகர்ந்து ஏமன் வளைகுடா பகுதிகளுக்கு சென்று விடுவதே வழக்கம். ஆனால் தற்போத உருவாகியுள்ள இந்த புயல் மஹாராஷ்ட்ரா மாநில கடற்கரைப் பகுதிகளை தாக்க உள்ளது.

இதற்கு முன்னர் 1882ம் ஆண்டு ஒரு புயல் மும்பையைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியதாக தெரிகிறது. தற்போது 138 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புயல் மும்பையை தாக்க உள்ளது.

தென்கிழக்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதி மற்றும் அதையொட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெற்று வடக்கு வடமேற்கு திசையில் 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. 'நிசர்கா' என பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் இன்று பகல் மகாராஷ்டிரா மற்றும் குஜாராத் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மஹாராஷ்டிராவின் கடற்கரை பகுதிகளான மும்பை, பால்கர், தானே, ராய்காட் ஆகிய பகுதிகளிலும் கோவா மற்றும் குஜராத் மாநிலங்களிலும் மணிக்கு 115 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக மும்பைக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகின் அதிக மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் ஒன்றான மும்பையில் புயலால் அதிக பாதிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கவே கொரோனா தொற்றால் நிலைகுலைந்துள்ள மும்பையை இன்று புயல் தாக்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் 'நிசர்கா' புயலை எதிர்கொள்ள தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை முடுக்கி விடப்படுள்ளன.

மும்பை மக்கள் யாரும் அடுத்த 2 நாட்களுக்கு வெளியே வரவேண்டாம் என முதல்வர் உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி  'டுவிட்டரில்' வெளியிட்ட பதிவில் 'இந்தியாவின் மேற்கு கடற்பகுதியில் உருவாகியுள்ள புயலால் ஏற்பட்டுள்ள நிலைமையை அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. ஒவ்வொருவரும் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுவோம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்