"அம்மாடியோவ்... இதுல கொஞ்சம் கூட உண்மையில்லை ..." கடைசில 'ரயில் டிக்கெட்' காசை... நாங்கதான் 'கொடுத்தோம்...' 'மகாராஷ்டிரா' உள்துறை அமைச்சர் கடும் 'குற்றச்சாட்டு...'
முகப்பு > செய்திகள் > இந்தியாபுலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ரயில் பயணத்துக்கான செலவில் 85 சதவீதத்தை மத்திய அரசு ஏற்றுக் கொள்வதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது உண்மைக்கு மாறான தகவல் என்று மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் குற்றம்சாட்டியுள்ளார்.
வெளிமாநிலங்களில் சிக்கியிருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்காக சிறப்பு ரயில்களை ரயில்வே இயக்கி வருகிறது. இந்த ரயில்களில் பயணம் செய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான டிக்கெட் கட்டணத்தில் 85 சதவீதத்தை மத்திய அரசு ஏற்றுக் கொள்வதாகவும் எஞ்சிய 15 சதவீதத்தை மாநில அரசுகள் ஏற்றுக் கொள்கின்றன என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் கூறியிருந்தார்.
ஆனால், இது உண்மைக்கு மாறான தகவல் என்று மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து குறிப்பிட்டுள்ள அவர், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரயில் டிக்கெட் கட்டணத்திற்கான செலவில் 85 சதவீதத்தை மத்திய அரசு ஏற்றுக் கொள்வதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதை கேட்டு நான் அதிர்ச்சியடைந்து போனேன். அவர் கூறியதில் உண்மையில்லை. இது உண்மைக்கு மாறானது. மகாராஷ்டிராவில் இருந்து இதுவரை சொந்த ஊர்களுக்கு சிறப்பு ரயில்களில் சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் முழு டிக்கெட் கட்டணத்தையும் மாநில அரசுதான் செலுத்தியுள்ளது." எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "ஊரடங்கு காரணமாக வருமானமின்றி தவித்த புலம்பெயர் தொழிலாளர்களிடம் டிக்கெட் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என்று ரயில்வேயிடம் மகாராஷ்டிரா அரசு கேட்டுக் கொண்டது. ஆனால், அந்த வேண்டுகோளை ரயில்வே ஏற்க மறுத்துவிட்டது. அதன்பிறகு டிக்கெட் கட்டணச் செலவு முழுவதையும் மகாராஷ்டிரா அரசு ஏற்றுக் கொண்டது" எனக் கூறினார்.
சுமார் 20 லட்சம் தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 200 கிமீ நடந்து ‘கால் வலி’.. ‘லிப்ட்’ கேட்டு லாரியில் ஏறிய அரைமணி நேரத்தில் விபத்து’.. 24 பேர் பலியான கோரவிபத்தின் பகீர் பின்னணி..!
- 'அரசு உத்தரவை' காற்றில் பறக்கவிட்ட 'ஐ.டி. நிறுவனம்...' பாதிக்கப்பட்ட '13 ஆயிரம் ஊழியர்கள்...' 'நோட்டிஸ் அனுப்பி கடும் எச்சரிக்கை...'
- 'நிறை மாத கர்ப்பிணி'... 'போகும் வழியில் நடந்த துயரம்'... 'போலீசாரை பதறவைத்த இளம் தம்பதி'!
- "கண்ணிமைக்கும் நொடியில உடல்கள் சிதறிப் போனது!.. கண்ணை மூடினா அந்த காட்சிதான்!".. 16 பேர் இறந்த ரயில் விபத்தில் உயிர் தப்பியவரின் 'உருகவைக்கும்' வாக்குமூலம்!
- ‘வெளிமாநிலத் தொழிலாளர்கள்’ சொந்த ஊர் திரும்ப ஆகும் ‘ரயில்’ பயண செலவை காங்கிரஸ் ஏற்கும்.. சோனியா காந்தி..!
- 'சொந்த ஊருக்கு போக முடியாமல் தவிப்பு'...'சிறப்பு ரயிலில் எப்படி பயணிப்பது'?... புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்த ரயில்வே!
- 'வேலைக்கு வராதோர் ஊதியத்தை பிடித்தம் செய்யலாம்...' 'உயர்நீதிமன்றத்தின்' உத்தரவால் அதிர்ந்து போன 'மாநில மக்கள்...'
- 'இதுவரை' இல்லாத அளவுக்கு... 'இன்று' ஒரே நாளில் '778 பேருக்கு' கொரோனா... மொத்த பாதிப்பு 6000ஜக் கடந்த 'மாநிலம்'...
- ‘ஊரடங்கால் வெளியே போக முடியல’.. அதான் ‘இத’ பண்ணலாம்னு நெனச்சோம்.. ‘சபாஷ்’ போட வைத்த கணவன்-மனைவி..!
- 'லாக்டவுன்' நேரத்திலும் 'வேலை பார்த்த'... 'பத்திரிகையாளர்கள்' 53 பேருக்கு 'கொரோனா...' பலருக்கு 'ரிசல்ட்' வர வேண்டியுள்ளதால்...'எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு...'