‘இப்டி யாரும் கோரிக்கை வச்சிருக்க மாட்டாங்க’.. ‘உடனே நிறைவேற்றிய நிர்மலா சீதாராமன்’.. குவியும் பாராட்டுக்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட சென்றபோது பெண் ஒருவர் நிர்மலா சீதாராமன் காரை நோக்கி துண்டு பேப்பரை வீசி கோரிக்கை விடுத்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.

கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதில் சிவமொக்கா, கார்வார், மங்களூரு, உடுப்பி, குடகு, ஹாசன் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் பலர் தங்களது வீடுகளையும், உடைமைகளையும் இழந்துள்ளனர்.

இந்நிலையில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்றார். அப்போது நிர்மலா சீதாராமன் சென்ற காரை நோக்கி பெண் ஒருவர் துண்டு பேப்பரை வீசியுள்ளார். இதனைப் பார்த்த நிர்மலா சீதாராமன் உடனே காரை நிறுத்த கூறியுள்ளார். அந்த காகிதத்தில் வெள்ளத்தால் வீடு இன்றி தனக்கு வீடு கட்டி தர வேண்டும் என எழுதியிருந்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து அப்பெண்ணை அழைத்த நிர்மலா சீதாராமன், ‘வீடு இல்லை என்பதற்காக நீங்கள் அழக்கூடாது. உங்களது கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படும்’ என தெரிவித்துள்ளார். மேலும் பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் குறித்து விளக்கம் அளித்துவிட்டு, அப்பெண்ணுக்கு வீடு வழங்கும் நடவடிக்கை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

NIRMALA SITHARAMAN, FINANCE MINISTER, KARNATAKA, LETTER, FLOOD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்