“3 மாசத்துக்கு.. இலவச சிலிண்டர்.. ஜன்தன் கணக்கில் ரூ.500”.. “ஏழைகளுக்கு ரூ.1.70 லட்சம் கோடி நிதி!”.. நிரமலா சீதாராமனின் மேலும் பல அறிவிப்புகள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை இந்திய பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார். இந்த நிலையில் மக்கள் பெரும்பாலானோர் வருமானம் உள்ளிட்ட பல சிக்கல்களை சந்திக்க சந்தித்து வருவதாகக் கூறி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு சலுகைகளை வெளியிட்டுள்ளார்.
அதன்படி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு இலவசமாக சிலிண்டர் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். தவிர, ஏழைகள், தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடியும், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சத்துக்கு மருத்துவ காப்பீடும் அறிவித்துள்ளார்.
மேலும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தரப்படும் ரூ.6 ஆயிரத்தில் ரூ.2 ஆயிரம் முன்கூட்டியே விவசாயிகளுக்கு வழங்க்கப்படுவதாகவும், ஜன்தன் வங்கிக் கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு 3 மாதத்துக்கு தலா ரூ.500 வழங்கப்படும் என்றும் 100 நாள் வேலைத்திட்டத்தில் கூடுதலாக ரூ.200 வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இதேபோல் 80 கோடி ஏழைகளுக்கு 5 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை, பருப்பு முதலானவை 3 மாத்துக்கு கூடுதலாக வழங்கப்படும் என்று இணை நிதி அமைச்சர் அனுராக் தக்கூர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “எனக்கு கொரோனா இருந்தா உங்களுக்கும் பரவட்டும்!”.. காரை நிறுத்திய போலீஸாரின் கிட்டே வந்து பெண் செய்த ‘பதறவைக்கும்’ சம்பவம்!.. வீடியோ!
- “கால்ல விழுந்து கெஞ்சி கேட்டுக்குறேன்!”.. கதறி அழுத டிராஃபிக் காவலர்.. நெஞ்சை உருக்கும் வீடியோ!
- ‘ஏப்ரல் 14-ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் முடக்கம்!’.. ‘காட்டுத்தீயாக பரவும் கொரோனாவால்’ பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவு!
- 23 வயது இளம்பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு.. மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு..!
- ‘லாரியில் வந்து ஒரே வீட்டில் தங்கியிருந்த 25 பேர்’.. போலீஸுக்கு வந்த ரகசிய தகவல்.. வேலூரில் பரபரப்பு..!
- கொரோனாவில் இருந்து குணமாகிய பின், மீண்டும் 69 வயது இத்தாலியருக்கு நேர்ந்த சோகம்!
- ‘கொரோனாவுக்கு எதிர்ப்பு... பிரதமருக்கு ஒத்துழைப்பு!’.. ‘பால் விநியோகம் கட், ஹோட்டல்கள் க்ளோஸ்!’
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- ‘வெளிநாடு’ வாழ் ‘இந்தியர்களுக்கு’ வருமான வரியில் ‘மாற்றம்?’... ‘நிதியமைச்சர்’ நிர்மலா சீதாராமன் ‘விளக்கம்’...
- 'சைவம்ங்க... வெங்காயம் சாப்பிட்டதே இல்ல!'.. 'எங்க கிட்ட போய்..'சர்ச்சையில்' சிக்கிய அமைச்சர்கள்!