‘கண்ணீருடன் வெளியே வந்த நிர்பயா தாய்’.. ‘மகள் போட்டோவை கட்டியணைத்து முத்தம்’.. மகிழ்ச்சியில் சொன்ன முதல் வார்த்தை..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நிர்பயா கொலை, பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டது.

கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியின் முனிர்கா பகுதியில் ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற பெண் கூட்டுபாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதில் கைது செய்யப்பட்ட அக்சய் குமார் சிங், வினய் குமார் ஷர்மா, முகேஷ் சிங், பவன் குப்தா, ராமன் சிங் ஆகிய ஐந்து பேருக்கு கடந்த 2017ம் ஆண்டு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது. இதில் முக்கிய குற்றவாளி ராமன் சிங் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார்

இதனை அடுத்து குற்றவாளிகள் குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பினர். இந்த கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்தார். இதனை அடுத்து நிர்பயா குற்றவாளிகள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதனைத் தொடர்ந்து டெல்லி ஆளுநரிடம் முறையீடு, உச்ச நீதிமன்றத்தில் முறையீடு, சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு என தொடர்ந்து 7 வருடங்களாக நிர்பயா குற்றவாளிகள் தூக்குதண்டனையை ரத்து செய்யக்கோரி போராடினர்.

இதனை அடுத்து இன்று அதிகாலை 2.30 மணியளவில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. விசாரணையில் 4 குற்றவாளிகளின் கருணை மனுவை நிராகரித்தது தவறு இல்லை என்றும், அவர்களை தூக்கில் போடுவதற்கு தடை விதிக்க முடியாது என்றும், இன்றே தூக்குதண்டையை நிறைவேற்றலாம் என்று உத்தரவிடப்பட்டது.

அப்போது நீதிமன்றத்தில் இருந்து கண்ணீருடன் வெளியே வந்த நிர்பயாவின் தாய் ஆஷா தேவி, அங்கிருந்த பெண் செய்தியாளர்களை கட்டிப்பிடித்து முத்தமிட்டார். பின்னர்  ‘என் மகள் போட்டோவை கட்டிப்பிடித்தேன். அவளுக்கு இன்று நீதி கிடைத்துவிட்டது. இது பெண்களுக்கான நீதி. நம் சட்ட போராட்டம் வென்றுவிட்டது. எனக்கு உதவியாக இருந்த மக்களுக்கும், நாட்டிற்கும் நன்றி’ என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

NIRBHAYAVERDICT, NIRBHAYACASE, NIRBHAYAJUSTICE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்