நிர்பயா பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை..! தேதி, நேரம் எப்போது..? நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நிர்பயா பாலியல் வன்கொடுமை கொலை குற்றவாளிகள் தூக்குத்தண்டனையை ஜனவரி 22ம் தேதி நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிர்பயா என்ற மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதனை அடுத்து நடைபெற்ற விசாரணையில் ஆறு பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் கைதான ஆறு பேரில் ஒருவர் சிறார் என்பதால் அவர் சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார். மீதமுள்ள 5 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் டெல்லி திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து தூக்குத்தண்டனை ரத்து செய்யக்கோரி முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா ஆகியோர் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் என நிர்பயாவின் தாயார் டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இன்று (07.01.2020) இந்த மனு மீது நடந்த விசாரணையில் குற்றவாளிகளுக்கு ஜனவரி 22ம் தேதி காலை 7 மணிக்கு திகார் சிறையில் தூக்குத்தண்டனை வழங்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

NIRBHAYAVERDICT, DELHI, NIRBHAYACASE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்