'மொத்தம்' 23 தண்டனைகள்... 1 லட்சத்து 37 ஆயிரம் 'வருமானம்'... இதுவரை வெளிவராத 'புதிய' தகவல்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான முகேஷின் கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்து விட்டார். இதையடுத்து வருகின்ற 22-ம் தேதி குற்றவாளிகள் நால்வரையும் தூக்கிலிட முடிவு செய்துள்ளது. தற்போது இவர்கள் நால்வரையும் போலீசார் ஷிப்ட் முறையில் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளில் குற்றவாளிகள் முகேஷ் சிங், அக்ஷய், பவன் மற்றும் விநாயக் ஆகிய நால்வரும் ஜெயிலில் செய்த விஷயங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி விநாயக், சிறை விதிமுறைகளை மீறியதற்காக 11 முறையும் முகேஷ் மூன்று முறையும் பவன் 8 முறையும் தண்டிக்கப்பட்டுள்ளனர். விதிவிலக்காக அக்ஷய் மட்டும் ஒரே ஒருமுறை சிறை விதிகளை மீறியிருக்கிறார்.

அதேபோல கடந்த 7 ஆண்டுகளில் ஜெயிலில் முகேஷ் எந்தவொரு வேலையும் செய்யவில்லை. அதேநேரம் அக்ஷய் 69 ஆயிரம் ரூபாயும், வினய் 39 ஆயிரம் ரூபாயும், பவன் 29 ஆயிரம் ரூபாயும் சம்பாதித்து உள்ளனர். இந்த தொகை அவர்களின் மரணத்திற்கு பின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.

2016-ம் ஆண்டு பவன், அக்ஷய், முகேஷ் ஆகியோர் சிறையில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கச் சேர்ந்துள்ளனர். ஆனால், மூன்று பேருமே பாஸ் ஆகவில்லை. 2015-ம் ஆண்டு வினய் இளங்கலை பட்டப்படிப்பில் சேர்ந்துள்ளார். ஆனால் அவரும் பட்டம் பெறவில்லை. குற்றவாளிகள் நால்வர் ஒருசேர தூக்கிலிடப்படுவது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை.

இதற்காக மீரட் சிறையில் இருந்து பவான் ஜல்லார்ட் என்ற ஹேங்மேன் திகார் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஒரு குற்றவாளிக்கு 15 ஆயிரம் வீதம் 4 பேருக்கும் சேர்த்து ரூபாய் 60 ஆயிரம் அவருக்கு அளிக்கப்படும். 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்