'நெருங்கும் தூக்கு கயிறு'... 'தண்டனையை தள்ளி போட 'நிர்பயா குற்றவாளி' செய்த ட்விஸ்ட்'... அதிர்ந்த அதிகாரிகள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாநிர்பயா வழக்கில் மரண தண்டனையைத் தள்ளிப் போடுவதற்காகக் குற்றவாளி வினய் செய்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டையே உலுக்கிய டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும், கடந்த 1-ம் தேதி தூக்கில் போடுவதற்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனுக்கள் தாக்கல் செய்ததால், தண்டனையை நிறைவேற்றுவதில் புதிய சட்டச் சிக்கல் உருவானது.
இது ஒருபுறம் நடக்கக் குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா, தனது தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரி ஜனாதிபதிக்குக் கருணை மனு அனுப்பினார். ஆனால் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அதனை நிராகரித்தார். இதை எதிர்த்து வினய் சர்மா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 3-ம் தேதி தூக்கில் போடும்படி புதிய தேதியை டெல்லி நீதிமன்றம் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து குற்றவாளிகளைத் தூக்கில் போடுவதற்கான வேலைகளை திகார் சிறை நிர்வாகம் செய்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் குற்றவாளி வினய் சர்மா கடந்த 16-ம் தேதி திகார் சிறைச்சாலையில் தன்னைத் தானே காயப்படுத்தி உள்ளார். அறையில் உள்ள சுவரில் தலையை வைத்து மோதியதில் வினய்க்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அனைத்து விதமான சட்ட வழிமுறைகளையும் மேற்கொண்டு அதில் தோல்வியடைந்த நிலையில், தூக்கில் போடுவதைத் தாமதப்படுத்துவதற்காக வினய் இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
'தமிழகத்தில் 1000 கோடிக்கு மேல் சொத்து'... 'வெளியான கோடீஸ்வரர் லிஸ்ட்'... முதலிடம் பிடித்த மாவட்டம்!
தொடர்புடைய செய்திகள்
- ‘உதவி’ கேட்ட இளைஞர்... ‘பின்தொடர்ந்து’ வந்த ‘நண்பர்கள்’... நம்பி ‘லிஃப்ட்’ கொடுத்த பெண்ணுக்கு ‘கடைசியில்’ நேர்ந்த ‘கொடூரம்’...
- 'கடத்திட்டுப்போய்... இரும்பு கம்பியால அடிச்சு'... மாணவியை துடிதுடிக்க வைத்த வெறியர்கள்... வீட்டுக்கு போகும் வழியில் நடந்த சோகம்!
- ‘தனியாக வீட்டில் இருந்த செவிலியருக்கு’... ‘நிகழ்ந்த பயங்கரம்’... 'மகளிர் நீதிமன்றம் கொடுத்த'... 'அதிகபட்ச தண்டனை'!
- தந்தையால் ‘மகள்களுக்கு’ நடந்த கொடூரம்... தாய் கொடுத்த ‘அதிர்ச்சி’ புகார்.... ‘அதிரடி’ தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்...
- 'அட்சதை போட வேண்டிய 'அப்பா'வே நாசம் பண்ணிட்டாரே'... 'கதறிய காதலி'... காதலன் எடுத்த அதிரடி!
- ‘நம்பி’ வந்த இளம்பெண்... நண்பர்களுக்கு ‘தகவல்’ கொடுத்து ‘காதலன்’ போட்ட ‘கொடூர’ திட்டம்... ‘அதிர்ச்சி’ சம்பவம்...
- சக குற்றவாளியுடன் உடலுறவு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டேன்.... நிர்பயா குற்றவாளி மனு... தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவு...
- "காவலர் சீருடையில் வந்து"... "தரதரவென்று இழுத்துப் போய்"... "ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்களுக்கு நடந்த கொடூரம்"...
- நிர்பயா வழக்கு: குற்றவாளிகளுக்கு 'தூக்குத்தண்டனை' விதித்த நீதிபதி... 'அதிரடி' இடமாற்றம்... என்ன நடந்தது?
- நண்பனை ‘சிறைக்கு’ அனுப்பிவிட்டு... ‘4 பேர்’ சேர்ந்து போட்ட ‘கொடூர’ திட்டம்... ‘நடுங்கவைக்கும்’ சம்பவம்...