ஃப்ரிட்ஜில் இளம்பெண் சடலம்.. சந்தேகம் வரக்கூடாதுன்னு லிவிங் டுகெதர் பார்ட்னர் செஞ்ச காரியம்.. பதற்றத்தில் டெல்லி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெல்லியில் தன்னுடன் லிவிங் டுகெதரில் இருந்த பெண்ணை கொலை செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில் இந்த வழக்கில் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர் டெல்லி போலீசார்.

Advertising
>
Advertising

                            Images are subject to © copyright to their respective owners.

Also Read | "வீட்டுக்கு வந்து சாப்பிட்டு தான் போகணும்".. குடும்பத்துடன் சேர்த்து வச்ச போலீசுக்கு பெண் வச்ச கோரிக்கை.. நெகிழ்ச்சி வீடியோ..!

ஹரியானாவில் உள்ள ஜாஜ்ஜர் பகுதியை சேர்ந்தவர் நிக்கி யாதவ். இவர் உத்தம் நகர் பகுதியில் உள்ள கோச்சிங் சென்டருக்கு சென்றபோது சாஹில் கெலாட் என்பவருடைய அறிமுகம் கிடைத்திருக்கிறது. இருவரும் நண்பர்களாக பழகிவந்த நிலையில் வேலை கிடைத்து வெவ்வேறு இடங்களுக்கு சென்றிருக்கின்றனர். இதனை தொடர்ந்து டெல்லியின் புறநகர் பகுதியில் உள்ள நஜாப்கரில் சொந்தமாக உணவகம் ஒன்றை துவங்கியுள்ளார் சாஹில்.

அப்போது வாடகைக்கு வீடு எடுத்து நிக்கி யாதவுடன் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்திருக்கிறார் சாஹில். இதனிடையே அவருடைய வீட்டில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளும்படி தெரிவித்திருக்கின்றனர். இந்த தகவலை அறிந்து நிக்கி யாதவ் மற்றும் சாஹில் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனிடையே பிப்ரவரி 9 ஆம் தேதி நிக்கி யாதவை சாஹில் கொலை செய்ததாகவும் அவருடைய உடலை தனது உணவகத்தில் இருந்த ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில், தப்பிச்சென்ற சாஹில் தனது பெற்றோர் பார்த்திருந்த பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். இதனிடையே நிக்கி யாதவின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சாஹிலை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் சாஹில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவரிடத்தில் இருந்த இரண்டு செல்போன்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர் ஆனால், இரண்டு போனிலும் அனைத்து தரவுகளும் அழிக்கப்பட்டிருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

இதுகுறித்து பேசிய டெல்லி (குற்றவியல் பிரிவு) கமிஷனர் ரவீந்திர சிங் யாதவ்,"அவரிடம் இருந்து இரண்டு போன்களை மீட்டோம். அழைப்பு விவரங்கள், சாட்கள் மற்றும் புகைப்படங்களைச் சரிபார்க்க நாங்கள் விரும்பினோம். ஆனால் கொலைக்குப் பிறகு இரண்டு தொலைபேசிகளிலிருந்தும் எல்லா தரவையும் அவர் நீக்கிவிட்டார். அவர் இருவருக்கு இடையேயான அழைப்புகள் மற்றும் செய்திகளை மறைக்க முயற்சிக்கிறார். தொலைபேசியிலிருந்து தரவை மீட்டெடுக்க, தொலைபேசியை தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்ப இருக்கிறோம்" என்றார்.

Also Read | மனசே குளிர்ந்து போச்சுப்பா.. 100-வது டெஸ்ட்டில் புஜாரா.. இந்திய அணி கொடுத்த கவுரவம்.. வீடியோ..!

NIKKI YADAV CASE, SAHIL, DELHI POLICE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்