கிடுகிடுவென அதிகரித்த புதிய வகை கொரோனா!.. மளமளவென சரிந்த ஐரோப்பிய, இந்திய பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு நிபுணர்கள் சொல்வது என்ன?
முகப்பு > செய்திகள் > இந்தியாமுந்தைய வாரம் 46,000 புள்ளிகள், கடந்த வாரம் 47,000 புள்ளிகள் என வரலாற்றுச் சாதனையாக புதிய உச்சத்தில் வர்த்தகமான சென்செக்ஸ் திங்கள் அன்று (21.12.2020) மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தது.
நேற்று ஒரே நாளில், முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு 6.59 லட்சம் கோடி ரூபாய் குறைந்ததாகவும், இன்றும் இந்திய பங்குச் சந்தைகள் இறக்கத்தைச் சந்திக்கும் என்கிற பயம் ஒரு புறம் இருந்தது, எனினும் இன்று முற்பகல் வரை முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று வந்த நிலையில், மதியம் 1.20 மணிக்கு மேல் திடீரென சென்செக்ஸ் 170 புள்ளிகள் குறைந்து 45,373 புள்ளிகளிலும், நிஃப்டி 13,274 புள்ளிகளில் வர்த்தகமானது.
ஆனால் பிற்பகல் யாரும் எதிர்பாராத விதமாக சென்செக்ஸ் திடீரென 452 புள்ளிகள் உயர்ந்து, 45,006 புள்ளிகள் என்கிற அளவிலும், நிஃப்டி 137 புள்ளிகள் உயர்ந்து 13,466 புள்ளிகள் என்கிற அளவிலும் வர்த்தகமாகின. இதுபற்றி கூறும் நிபுணர்கள், இங்கிலாந்தில் புதிய ரக கொரோனா பாதிப்பு, இரண்டாவது அலை கொரோனா எல்லாம் அதிகரித்து வருவதால், ஐரோப்பிய சந்தைகள் நேற்று பலவீனமாகியதாகவும், அதனால் நேற்று இந்திய சந்தையும் சரிந்ததாகவும் கூறுகின்றனர்.
கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒரு பக்கம் கண்டுபிடிக்கப்பட்டாலும், புதிய கொரோனா வைரஸ் பரவல் மற்றும் இதன் காரணமாக லாக்டவுன் மீண்டும் கடுமையாகுமோ என்கிற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும். இதுவே சந்தை சரிவுக்கு காரணம். ஆனால் உண்மையில் பங்குச் சந்தையில் இந்த ஏற்றமும் இறக்கமும் மாறிமாறிதான் வந்து கொண்டு இருக்கும்.
எனவே இந்த சமயத்தில் முதலீட்டாளர்கள் சமயோஜிதமாக `புராஃபிட் புக்கிங்' எனப்படக் கூடிய, ‘லாபத்தைக் கொடுத்திருக்கும் பங்குகளை’ முதலில் விற்று வெளியேற வேண்டும். தவிர, நீண்டகால அடிப்படையில் லாபம் தரும் பங்கு என ஒருவேளை முதலீட்டாளர்கள் நினைக்கும் பட்சத்தில், அதிலும் குறைந்த அளவிலான பங்குகளை மட்டும் விற்றுவிடுவதே சிறந்தது. ஏனெனில் நீண்ட கால நோக்கில் லாபம் இப்போது உண்டாகாது. எனவே, இன்றைய லாபம் தரும் பங்குகளை விற்று சம்பாதிப்பதும், இந்த நேரத்தில் குறைந்த முதலீட்டினை செய்வதுமே புத்திசாலித்தனம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மொத்தமாக ஒரே மற்றும் பெரிய அளவிலான முதலீட்டை மேற்கொள்வதை விட, மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டை மேற்கொள்ளலாம் என்றும் அதே சமயம் தங்கத்தின் மீது முதலீட்டாளர்கள் கவனமாக இருத்தல் நலம் என்றும் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஃபிட்னஸ நிரூபிச்சு ஆஸ்திரேலியா போயும்'... 'ரோஹித் சர்மாவுக்கு எழுந்துள்ள புது சிக்கல்?!!'... 'அப்போ எப்போதான் அவரு விளையாடுவாரு???'...
- 'ஒரே நாளில் பெரும் இழப்பு'... 'இப்படி ஒரு நாளை நாங்க எதிர்பார்க்கவே இல்ல'... அதிர்ந்துபோன முதலீட்டாளர்கள்!
- 'UK-வில் புதிய வகை கொரோனா பரவி வரும் நிலையில், இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த 266 பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 5 பேருக்கு தொற்று உறுதி!'.. 'இன்று இரவு முதல் விமான சேவைகள் ரத்து!'
- அதி வேகமாக பரவும் புதிய கொரோனா... உச்சகட்ட பரபரப்பில் உலக நாடுகள்!.. நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?.. விரிவான தகவல்!
- மறுபடியும் அதே ‘டிசம்பர்’!.. பரவும் ‘புதிய’ வகை கொரோனா.. டிரெண்டாகும் #CoronavirusStrain ஹேஷ்டேக்.. என்ன காரணம்..!
- 'ஆந்திராவில் எபிலெப்ஸி!'.. 'புதிய ரக கொரோனா!'.. 'இப்போ கடவுளின் தேசத்தில் பரவும் இன்னொரு நோய்!'.. கேரள சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்!
- ‘உருமாற்றம் அடைந்து வேகமாக பரவும்’... ‘புதிய வகை கொரோனா வைரஸ்’... ‘இந்த நாடுகளிலும் பரவியிருக்கலாம்’... ‘உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி தகவல்’...!!!
- ‘ரொம்ப நாளா எதிர்பார்த்த ஒன்னு’.. கொரோனாவால் பறிபோன ‘வேலை’.. அமெரிக்கா ‘அதிரடி’ அறிவிப்பு..!
- 'அதிகரிக்கும் கொரோனா'... 'இன்று முதல் 15 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு'... அதிரடியாக அறிவித்த மாநிலம்!
- ‘ஒருவழியா குறைஞ்சுதுன்னு பெருமூச்சு விடுறதுக்குள்ள’.. பிரிட்டனில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த பயணிக்கு கொரோனா உறுதி! .. ‘புதிய ரக கொரோனா வைரஸ் இருக்கிறதா?’ - சுகாதாரத் துறை சொல்வது என்ன?