அவரைப்பத்தி ஒரேயொரு தகவல்..25 லட்சம் ரூபாய் சன்மானம்... இந்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு.. யார் இந்த தாவூத் இப்ராஹீம்..?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தேசிய புலனாய்வு அதிகாரிகள் தாவூத் இப்ராஹீம் மற்றும் அவரது கூட்டாளிகள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு லட்சக்கணக்கில் சன்மானம் கொடுக்கப்படும் என அறிவித்திருக்கின்றனர். இந்நிலையில், அவர்களது சமீபத்திய புகைப்படங்களும் வெளியிடப்பட்டிருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | 70 வருஷத்துக்கும் மேல நடைபெறும் தக்காளி அடிக்கும் திருவிழா.. டன் கணக்கில் இறக்கப்பட்ட தக்காளி லோடு.. சுவாரஸ்ய வரலாறு..!

அதிர்ந்த நாடு

இந்தியாவில் கடந்த 1993 ஆம் ஆண்டு நிகழ்ந்த மும்பை குண்டுவெடிப்பு சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மொத்தம் 12 இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்தன. இதில் 257 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 700க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக இப்ராஹிம் செயல்பட்டதாக இந்திய அரசு அறிவித்திருந்தது. இதன்மூலம் ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு பிரிவு தாவூத் இப்ராஹீமை உலகளாவிய பயங்கரவாதியாக அறிவித்திருந்தது.

இதனையடுத்து அவரை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. தாவூத், ஆயுத கடத்தல், போதை பொருள் வணிகம், அந்நிய செலவாணி மோசடி, லஷ்கர்-இ-தொய்பா, அல் கொய்தா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய பயங்கரவாத குழுக்களுக்கு உதவியாக இருந்ததாக தேசிய புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சன்மானம்

இந்நிலையில், தாவூத் இப்ராஹீம் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூபாய் 25 லட்சம் சன்மானமாக அளிக்கப்படும் என இந்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்திருக்கிறது. மேலும், தாவூத் இப்ராகிமின் லெப்டினன்ட், சோட்டா ஷகீல் குறித்த தகவல்களை பகிர்பவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என NIA அறிவித்துள்ளது. அதேபோல, மற்ற பயங்கரவாதிகளான அனீஸ் இப்ராகிம், ஜாவேத் சிக்னா மற்றும் டைகர் மேமன் ஆகியோர் குறித்த தகவல்களை அளிப்பவர்களுக்கு தலா ₹15 லட்சம் பரிசுத் தொகையாக அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

டி-கம்பெனி

கடந்த ஆண்டு இந்திய அரசு வெளியிட்டிருந்த அறிக்கையில்,"டி-கம்பெனி என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவானது தங்கம் மற்றும் கள்ளநோட்டுகளை கடத்தும் ஒரு பயங்கரவாத அமைப்பாக இயங்கிவருகிறது. இந்த குழு 1993 இல் மும்பை நகரில் தொடர் குண்டுவெடிப்புகளை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலில் 250க்கும் மேற்பட்ட அப்பாவி உயிர்கள் பலியாகின. இதனால் பல மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துகள் சேதமடைந்தன" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

Also Read | பாசத்துல நம்மளையே மிஞ்சிடுவாங்க போலயே.. விராட் கோலிக்கு ஹாங்காங் அணியினர் கொடுத்த ஜெர்சி.. அதுல எழுதியிருந்த விஷயம் தான் செம்ம..!

NIA, NIA ANNOUNCES, REWARDS, DAWOOD IBRAHIM, தாவூத் இப்ராஹீம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்