‘வேகமாக பரவும் கொரோனா 2-வது அலை’!.. ‘அடுத்த 4 வாரம் மிகவும் நெருக்கடியானதாக இருக்கும்’.. மத்திய சுகாதாரத்துறை ‘முக்கிய’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா பரவலில் அடுத்த 4 வாரங்கள் மிகவும் நெருக்கடியாக இருக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த மாதம் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. அது இந்த மாதத்திலும் தொடர்ந்து வருகிறது. இந்தியாவில் நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கொரோனா பரவலில் அடுத்த 4 வாரங்கள் மிகவும் நெருக்கடியாக இருக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன், நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) விகே பால் ஆகியோர் பத்திரிக்கையாளர்களுக்குப் பேட்டியளித்தனர். அதில், ‘கொரோனாவின் 2-வது அலை முதல் அலையை விட மிகவும் வேகமாக பரவுகிறது. நாம் இதை சமாளிக்க வேண்டும். எதிர்கொள்வதோடு மட்டுமல்லாமல் வீழ்த்தவும் வேண்டும். 2-வது அலையை கட்டுப்படுத்துவதில் மக்களின் பங்களிப்பு அவசியம். அடுத்த 4 வாரங்கள் நெருக்கடியானதாக இருக்கும். ஒட்டுமொத்த நாடும் ஒன்றிணைந்து கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
கொரோனா பாதிப்பால் ஏற்படும் பலி எண்ணிக்கையை குறைப்பதுதான் தடுப்பூசியின் முக்கிய நோக்கம். மருத்துவ துறையில் பணியாற்றுவோரை காப்பாற்றுவதும் அந்த திட்டத்தின் மற்றொரு முக்கிய நோக்கமாகும். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் நபர்களை பாதுகாப்பதே எந்த ஒரு நாட்டின் நோக்கமும் ஆக இருக்கும். யார் விரும்புகிறார்களோ அவர்களுக்கு தடுப்பூசி போடுவது இலக்கு அல்ல. யாருக்கு அதிக பாதிப்பு ஏற்படுமோ அவர்களுக்கு தடுப்பூசி போடுவதோ இலக்கு’ என தெரிவித்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'திடீரென வாக்குச்சாவடியில் தொற்றிய பரபரப்பு'...'வாக்கு சாவடிக்குள் வந்த ஆம்புலன்ஸ்'... 'பிபிஇ கிட் உடையணிந்து இறங்கிய 'கனிமொழி'!
- 'போற போக்க பார்த்தா... வட்டிக்கு வாங்கி தான் ஐபிஎல் நடத்தணும் போலயே'!.. இது சரிபட்டு வராது!.. ஐபிஎல் நல்லா நடக்கணும்னா... மொதல்ல 'இத' பண்ணுங்க!!
- என்னது தங்க மூக்குத்தி இலவசமா...! 'ஆமாங்க அது பெண்களுக்கு...' 'ஆண்களுக்கு இன்னொரு ஸ்பெஷல் ஐட்டம் இருக்கு...' - என்ன மேட்டர் தெரியுமா...?
- எலெக்ஷன் முடிஞ்சதுக்கு அப்புறம் தமிழகத்தில் முழு ஊரடங்கா...? - விளக்கம் அளித்த சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன்...!
- ‘வேற வழியே இல்ல’!.. நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. மகாராஷ்டிரா முதல்வர் ‘அதிரடி’ அறிவிப்பு..!
- ‘இன்னும் 5 நாள்தான் இருக்கு, அதுக்குள்ள RCB-க்கு வந்த சிக்கல்’!.. தீவிர ஆலோசனையில் கேப்டன் கோலி..!
- 'யாரு கண்ணு பட்டுச்சோ... சென்னை அணிக்கு அடி மேல அடி விழுது!.. ரசிகர்களை கலக்கமடையச் செய்த சம்பவம்'!.. 'போன வருஷமே நிறைய இழுந்துட்டோம்'!
- 'நான் உங்கள பயமுறுத்தல'... 'ஊரடங்கு இல்லைன்னுசொல்ல முடியாது, ஆனா'... உத்தவ் தாக்கரே வைத்திருக்கும் ட்விஸ்ட்!
- ‘கவனமாக இருங்க’!.. ‘நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்’.. சச்சின் டெண்டுல்கர் திடீர் அறிவிப்பு..!
- 'என்கிட்ட அவரு கடைசியா பேசுறப்போ சொன்ன விஷயம் இது...' 'கொரோனாவினால் மறைந்த டாக்டர் சைமன் உடலை...' - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!