புத்தாண்டு பரிசாக ‘சம்பள உயர்வை’ அறிவித்த முதல்வர்.. இன்ப அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்.. எந்த மாநிலம் தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > இந்தியாபுத்தாண்டு பரிசாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியதாவது, ‘9,36,976 அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும். இதன்மூலம் மானிய உதவி ஊழியர்கள், வசூலிக்கும் ஊழியர்கள், தினசரி கூலிகள், முழுநேர படைப்பிரிவு ஊழியர்கள், பகுதிநேர படை ஊழியர்கள், வீட்டு காவலர்கள், அங்கன்வாடி தொழிலாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள், அவுட்சோர்சிங் உள்ளிட்ட தொழிலாளர்கள், ஆஷா தொழிலாளர்கள், வித்யா தன்னார்வலர்கள், ஓய்வூதியம் பெறும் மக்கள் என அனைவருக்கும் இது பயனளிக்கும்’ என கூறியுள்ளார்.
மேலும் அனைத்து அரசுத் துறைகளிலும் உள்ள காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த முடிவுகளை அமல்படுத்துவதற்கான வழிமுறைகளைச் செயல்படுத்த தலைமைச் செயலாளர் சோமேஷ் குமார் தலைமையிலான அதிகாரப்பூர்வ குழுவை முதல்வர் நியமித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் அலுவலகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், ஜனவரி முதல் வாரத்தில், முதல்வர் நியமித்த குழு, சம்பள திருத்த ஆணையத்தின் (பி.ஆர்.சி) அறிக்கையை ஆய்வு செய்யும். இரண்டாவது வாரத்தில் ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகளை சந்திக்கும். கலந்துரையாடல்களின் அடிப்படையில் சம்பள உயர்வு, ஊழியர்களின் ஓய்வூதிய வயதை அதிகரிக்கும் அளவு, சேவை விதிகளை திருத்துதல், பதவி உயர்வுகளுக்கான திருத்தப்பட்ட கொள்கை மற்றும் மண்டல முறையை அமல்படுத்துவதற்கான சட்ட சிக்கல்களை சமாளிக்க பின்பற்ற வேண்டிய வழிகளை அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்யும். பின்னர், மாநில அமைச்சரவை சந்தித்து இறுதி முடிவுகளை எடுக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவைப்பட்டால் தெலுங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (டி.எஸ்.ஆர்.டி.சி) நிதிச் சுமையும் மாநில அரசால் ஏற்கப்படும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அரசாங்கத்தில் காலியாக உள்ள அனைத்து பதவிகளையும் கண்டறிந்து பிப்ரவரி மாதம் முதல் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'திடீரென வந்த மெயிலால் குஷியான ஊழியர்களுக்கு'... 'அடுத்ததாக காத்திருந்த பெரிய டிவிஸ்ட்?!!'... 'ஷாக் கொடுத்த பிரபல நிறுவனம்!!!'...
- 'கொரோனா பாதிப்பால் விப்ரோ எடுத்துள்ள முடிவு'... 'வெளியான புது அறிவிப்பால் மகிழ்ச்சியில் ஊழியர்கள்!!!'...
- திரையில் வில்லன்.. நிஜத்தில் ‘ஹீரோ’.. சோனு சூட்டுக்கு ‘கோயில்’ கட்டிய ரசிகர்கள்.. சிலை செய்த ‘சிற்பி’ சொன்ன உருக்கமான பதில்..!
- 'கொரோனா பாதிப்பால்'... 'பிரபல நிறுவனம் எடுத்துள்ள அதிரடி முடிவு?!!'... 'அதிர்ச்சி தரும் அறிவிப்பால் கலக்கத்தில் ஊழியர்கள்!!!'...
- 'கொரோனாவால் அதிரடி திட்டத்தை கையிலெடுக்கும் இன்ஃபோசிஸ்?!!'... 'அசத்தல் அறிவிப்பால் மகிழ்ச்சியில் ஐடி ஊழியர்கள்!!!'...
- 'இந்த நேரத்துலயா இப்படி நடக்கணும்???'... 'திவாலாகும் இரு பெரும் நிறுவனங்கள்?!!'... 'கலங்கி நிற்கும் 25,000 ஊழியர்கள்!!!'...
- ‘கல்லூரி மாணவர்களின்’... ‘அரியர் தேர்வு விவகாரத்தில்’... ‘உயர்நீதிமன்றத்தில்’... ‘யுஜிசி திட்டவட்டம்’...!!!
- 'அடுத்தடுத்த புரோமோஷன்கள்.. சம்பள உயர்வை' அறிவித்து மாஸ் காட்டும் 'தாராள' ஐடி நிறுவனம்.. கொண்டாட்டத்தில் ஊழியர்கள்!!
- 'தமிழகத்தில் கொரோனா தடுப்பு மருந்து'...!!! 'முதல்கட்ட பரிசோதனை குறித்து'...!!! அமைச்சர் விஜயபாஸ்கர் சொன்ன தகவல்...!!!
- 'இனி H-1B விசா தேர்விற்கு புதிய Rule???'... 'திடீர் பரிந்துரையால்'... 'இந்தியர்களுக்கு எழுந்துள்ள அடுத்த பெரும் சிக்கல்!!!'...