வீட்டை எதிர்த்து 'காதல்' திருமணம்... 2 மாதம் மட்டுமே 'நீடித்த' மகிழ்ச்சி... 'நிலைகுலைந்து' போன குடும்பம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாவீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்த தம்பதியரின் வாழ்வில் விதி விளையாடிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த சாவகாட் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் நந்த கிஷோர். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த நைமா என்ற பெண்ணும் பள்ளி காலத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். ஆனால், நந்த கிஷோர் இந்து, நைமா முஸ்லீம் என்பதால் இவர்கள் காதலுக்கு நைமா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. எனினும் இருவரும் தங்களது காதலில் உறுதியாக இருந்ததால் கடந்த ஜனவரி 5-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின் இருவரும் அதே பகுதியில் வசித்து ஆரம்பித்தனர். இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் இவர்கள் இருவருக்கும் எதிர்ப்புகள் வர ஆரம்பித்தன. எனினும் அத்தனையையும் எதிர்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தான் விதி அவர்கள் வாழ்க்கையில் விளையாடி இருக்கிறது. நேற்று மதியம் 1 மணியளவில் நைமா தன்னுடைய ஸ்கூட்டியில் அருகில் இருந்த வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது முன்னால் சென்ற பேருந்து ஒன்றை முந்திச்சென்று இருக்கிறார்.
எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரி நைமாவின் ஸ்கூட்டர் மீது மோத, இதில் நைமா அங்கேயே சரிந்து விழுந்துள்ளார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து இறந்த தங்களது மகளைக் காண அவரது பெற்றோர்கள் வந்துள்ளனர். தொடர்ந்து நைமாவை தங்களது முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் எனக்கேட்டு, அவரை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்துள்ளனர்.
திருமணமான 2 மாதத்தில் நைமா விபத்தில் இறந்ததும், திருமணத்திற்கு வராத பெற்றோர் கடைசியாக அவரது இறந்த உடலைக்காண வந்ததும் அப்பகுதி மக்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மீன் வறுவல் மட்டும் இல்ல'... 'கொரோனா பாதித்தவர்களுக்கு அசர வைக்கும் மெனு'... கலக்கும் கேரளா!
- ‘கொரோனா விடுமுறை’.. ஊட்டிக்கு டூர் போன கல்லூரி மாணவர்கள்.. பதபதைக்க வைத்த கோரவிபத்து..!
- வீண் 'வதந்திகள' நம்பாதீங்க.... இந்தியாவுல கொரோனாவோட 'உண்மை' நிலவரத்த... 'இங்க' போய் தெரிஞ்சுக்கங்க!
- இரண்டு நாளாக 'உணவில்லை'... நடுரோடுகளில் 'இறக்கி' விடப்படும் அவலம்... உச்சகட்டமாக 'குழந்தையுடன்' இருந்த குடும்பத்துக்கு தங்குமிடம் மறுப்பு!
- ‘துக்க நிகழ்ச்சிக்கு போனபோது’... ‘தாய், மகனுக்கு’... ‘நடுவழியில் நிகழ்ந்த பயங்கரம்’!
- 'இஞ்சி, எலுமிச்சை எல்லாம் கலந்து... தயாரிக்கப்பட்ட அறிய வகை கொரோனா தடுப்பு ஜூஸ்!'... விஞ்ஞானிகளுக்கு டஃப் கொடுத்த ஜூஸ் கடைக்காரர்!
- ‘இது ஒன்னும் அவங்க தப்பில்ல.. மனுஷத் தன்மை இல்லாம நடந்துக்குறத ஏத்துக்கவே முடியாது!’.. கொரோனா விவகாரத்தில் கொதித்த பினராயி!
- ‘திடீரென’ வந்த லாரி... வேகத்தை ‘குறைப்பதற்குள்’ ஹேண்டிலில் ‘சிக்கிய’ பையால்... ‘இன்ஜினியரிங்’ மாணவருக்கு நேர்ந்த ‘கோர’ விபத்து...
- போலீசாரின் 'கொரோனா' டான்ஸ்...! 'பொதுமக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில்...' வைரலாகும் கேரளா போலீஸ் படையின் நடனம்...!
- பைக்கில் சென்ற மாணவர் மீது 'மோதி' ஏறி இறங்கிய கல்லூரி பேருந்து... நண்பர்களின் கண்முன்னே 'துடிதுடித்து' இறந்த மாணவர்... கதறியழுத மாணவ,மாணவிகள்!