'அவசியம் குடும்பத்தோட வரணும்'.. 'விருந்துக்கு வந்த மாமனாருக்கு'.. மருமகனின் கொடூர தண்டனை!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்தரகாண்ட்டின் சுல்தான்பூர்பட்டியைச் சேர்ந்த ரயீஸ் அகமது என்பவரின் மகள் ருஹ்ஷருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இக்ரமுக்கும்  அண்மையில் திருமணம் நடந்தது. ஆனால் மணமகன் இக்ரமின் சகோதரிகள் எழுப்பிய வரதட்சணைப் பிரச்சனையால் தம்பதியரான இக்ரம்- ருஷ்ஹர் இருவருக்குமிடையே சண்டை மூண்டது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இக்ரமின் மனைவி ருஷ்ஹர், தனது தந்தை ரயீஸ் அஹமதுவிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளார். அவரும், வேறு வழியின்றி கிராம பஞ்சாயத்தைக் கூட்டி அங்கு இந்த பிரச்சனையைப் பற்றி பேசி, இறுதியில் தம்பதியர் இருவரும் தற்காலிகமாக தனிக்குடித்தனம் செல்வது சிறந்தது என முடிவெடுக்கப்பட்டது.

எனினும் இதில் இக்ரமுக்கு உடன்பாடில்லை எனத் தெரிகிறது. ஆனாலும் அதைக் காட்டிக்கொள்ளாத இக்ரம், தனிக்குடித்தனம் சென்ற பிறகு, தன் மாமனாரை குடும்ப விருந்துக்கு அழைத்துள்ளார். ரயீஸூம் மாப்பிள்ளையின் வேண்டுகோளுக்கிணங்க, தன் குடும்பத்துடன் மாப்பிள்ளையின் வீட்டுக்கு விருந்துக்காகச் சென்றுள்ளார்.

அப்போது இக்ரமுக்கும் ரயீஸ் அஹமதுவுக்கும் இடையே வரதட்சணை பற்றிய பேச்சு எழுந்துள்ளது. இந்த பேச்சு, இருவருக்குமான விவாதமாக மாறியது. மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக, வரதட்சணை பிரச்சனையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு முற்றியது. அப்போது மாமனார் என்றும் பாராமல், இக்ரம் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து திடீரென சுட்டுவிட்டார்.

கோபத்தில் இப்படி ஒரு செயலைச் செய்த இக்ரம், போலீஸுக்கு தாமாகவே போன் செய்து, தன் மாமனாரை சுட்டுவிட்டதாகக் கூறியுள்ளார். பின்னர் 20 நிமிடங்கள் கழித்து வந்த போலீஸார் இக்ரமைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், இக்ரம் மற்றும் ரயீஸ் அஹமதுவின் குடும்பத்தினரிடையே பெருத்த சோகத்தையும் ஏற்படுத்தியது.

BIZARRE, SAD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்