ஹனிமூன் போன புதுமண தம்பதி.. குதிரை சவாரி செய்யும்போது மணமகனுக்கு நேர்ந்த சோகம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தேனிலவுக்காக சென்ற இடத்தில் புது மாப்பிள்ளை மரணமடைந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

Advertising
>
Advertising

                     Images are subject to © copyright to their respective owners.

Also Read | சூரிய குமார் யாதவின் வெறித்தனமான கேட்ச்.. மிரண்டு போன வர்ணனையாளர்கள்.. வைரல் வீடியோ..!

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையை சேர்ந்தவர் முகமது காசிப் இம்தியாஸ் ஷேக். 23 வயதான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்று இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தேனிலவு செல்ல புதுமண தம்பதியர் முடிவெடுத்து இருக்கின்றனர். அதன்படி ராய்கட் என்னும் மலைவாசஸ்தளத்திற்கு இருவரும் சென்றுள்ளனர்.

மும்பையின் புகழ்மிக்க சுற்றுலா தளமாக ராய்கட் அறியப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலா வாசிகளின் முக்கிய தேர்வாக இருப்பது குதிரை சவாரி என சொல்லப்படுகிறது. அந்த அளவிற்கு இந்தப் பகுதியில் குதிரை சவாரி பிரபலமாக இருக்கிறது. இந்நிலையில் தேனிலவுக்காக தனது மனைவியுடன் பகுதிக்குச் சென்ற ஷேக் குதிரை சவாரி செய்ய நினைத்திருக்கிறார். அப்போது ஷேக்கின் மனைவி மற்றும் அவருடைய நண்பர்கள் இருவரும் உடனிருந்திருக்கின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

நான்கு பேரும் ஆளுக்கு ஒரு குதிரையில் சவாரி செய்யும் போது ஷேக் பயணித்த குதிரை திடீரென தனது கட்டுப்பாட்டை மீறி வேகத்துடன் ஓட துவங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஷேக் குதிரையை கட்டுப்படுத்த முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. அதி வேகமாக ஓடிய குதிரையிலிருந்து ஷேக் நிலை தடுமாறி கீழே விழுந்திருக்கிறார். அங்கு பாறைகள் நிறைந்து இருந்ததால் அவருக்கு பல இடங்களில் கடுமையான காயங்கள் ஏற்பட்டு இருக்கின்றன.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஷேக்கின் நண்பர்கள் உடனடியாக அவரை மதேரான் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக உல்ஹஸ் நகர் பகுதியில் இயங்கி வரும் மருத்துவமனையில் ஷேக் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் ஷேக் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்திருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து உல்ஹஸ் நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற விபத்துக்கள் இப்பகுதியில் அதிகம் நடைபெறுவதாகவும் குதிரை சவாரி செய்யும் நபர்களுக்கு ஹெல்மெட் வழங்க வேண்டும் என்ற விதிமுறையை யாரும் பின்பற்றுவதில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இனி குதிரை சவாரி செய்யும் நபர்கள் ஹெல்மெட் அணியாத பட்சத்தில் குதிரைக்காரர்களுக்கு மற்றும் சுற்றுலா வாசிகளுக்கு கடும் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.

திருமணம் முடிந்த கையோடு தேனிலவுக்கு சென்றிருந்த புது மாப்பிள்ளை குதிரை சவாரி செய்யும்போது எதிர்பாராத விதமாக மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Also Read | தாலிகட்டும் நேரத்துல மாயமான மாப்பிள்ளை.. பெண்வீட்டார் எடுத்த அதிரடி முடிவு.. கடலூரில் பரபரப்பு..!

NEWLY MARRIED, MAN, HORSE, FELL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்