புதுச்சேரியில் தாராளமா புத்தாண்டு கொண்டாடலாம்...'- க்ரீன் சிக்னல் கொடுத்த உயர் நீதிமன்றம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபுதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை ஏதும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் வருகிற ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு தின கொண்டாட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. புத்தாண்டு தினத்தைக் கொண்டாட மக்கள் சென்னை மெரினா உட்பட கடற்கரைகளில் கூட்டம் சேரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டையொட்டி இசிஆர் சாலையில் உள்ள பண்ணை வீடுகளிலும், நட்சத்திர ஓட்டல்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டுவது வாடிக்கை. இளைஞர்கள் கடற்கரையில் கூடி புத்தாண்டை வரவேற்பர். ஆனால், இந்த ஆண்டு அத்தனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் முக்கிய சாலைகளில் இளைஞர்கள் புத்தாண்டு கொண்டாட தடை உள்ளது. குறிப்பாக ஈசிஆர் சாலைகளில் கட்டுப்பாடுகள் மிகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் கொரோனா வைரஸ் பரவலால் பண்ணை வீடுகளிலும் நட்சத்திர ஓட்டல்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டவில்லை.
இந்த வருடமும் ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் சூழலில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பொதுமக்கள் அதிகமாக கூடுவதை தவிர்ப்பதற்காக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பண்ணை வீடுகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடத்த தடை உள்ளது.
புதுச்சேரி அரசு அறிவிப்பின் படி சில விதிமுறைகள், கட்டுப்பாடுகள் உடன் மக்கள் புத்தாண்டு கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பொது இடங்களில் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து இருக்க வேண்டும். நிச்சயம் 2 தடுப்பூசிகள் செலுத்தி இருக்க வேண்டும் என்று உத்தரவுகள் உள்ளன.
முக்கிய உத்தரவாக டிசம்பர் 31-ம் தேதி இரவு 10 மணி முதல் ஜனவரி 1-ம் தேதி அதிகாலை 1 மணி வரையில் புதுச்சேரியில் மது விற்பனை நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. புதுச்சேரி காவல்துறையினர் ஆங்காங்கே பரிசோதனைகளில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
திரைப்படங்களை மிஞ்சும் அரசு ஆவணப்படம் - திருநெல்வேலி பூர்வகுடிகளுக்காக தமிழக அரசின் சிறப்பு வெளியீடு
தொடர்புடைய செய்திகள்
- New Year : புதுச்சேரி வரும் சன்னி லியோன்.. 18 வயசுக்கு மேலே இருந்தால்தான் அனுமதி.. கூடவே ஒரு கண்டிசன்
- 'புத்தாண்டில் பீச் போக அனுமதி இல்ல...' அடுத்தது ஸ்டார் ஹோட்டல்களிலும் கொண்டாட்ட தடையா...? - வெளியாகியுள்ள 'பரபரப்பு' தகவல்...!
- ‘இதை திறந்தால்’ 1 கிலோ தக்காளி ரூ.40-க்கு விற்க தயார்.. சென்னை உயர்நீதிமன்றத்தில் கோயம்பேடு வியாபாரிகள் உறுதி..!
- வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றும் உத்தரவு ரத்து.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!
- "ஏன் பொண்ணுனா தனியா போக கூடாதா"?.. நீதிமன்றம் வரை சென்று போராடி... வென்று காட்டிய 'அக்னி சிறகு'!.. வியக்கவைக்கும் பின்னணி!
- 'அதே கார்... அதே வழக்கு... அதே நீதிபதி'!.. விஜய்யை தொடர்ந்து தனுஷ்... உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்!.. பின்னணி என்ன?
- நீதி வேண்டும், நியாயம் வேண்டும்...! 'பல தடவ கேட்டுப் பார்த்தாச்சு...' 'ரெஸ்பான்ஸ் இல்ல...' - அப்பாவிற்கு எதிராக 'போராட்டத்தை' தொடங்கியுள்ள மகன்...!
- 'கேப் விடாமல் அடித்த விஜய்யின் வக்கீல்'!.. சரமாரி கேள்விகளால்... அனல்பறந்த விவாதம்!.. சொகுசு கார் வழக்கில்... உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
- ‘1 டன் மீன், 200 கிலோ இறால், 50 கிலோ கோழி...!’ வண்டி வண்டியா வந்த பொருள்.. ஆடி மாச சீரில் மருமகனை ஆடிப்போக வைத்த மாமனார்..!
- எச்.ராஜாவுக்கு புதிய நெருக்கடி!.. கைவிரித்த உயர்நீதிமன்றம்!.. 2 ஆண்டுகளுக்கு பின் சூடுபிடிக்கும் விசாரணை!