VIDEO: எங்க மேனேஜர 'கைநீட்டி' அடிச்சாங்க...! 'ஆக்சுவலா அங்க என்ன நடந்துச்சுன்னா...' - 'சேலை' அணிந்து வந்ததால் 'ஹோட்டல்' உள்ளே விட மறுத்த விவகாரத்தில் 'அதிரடி' திருப்பம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சேலை அணிந்து வந்ததால் ஹோட்டலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட விவகாரத்தில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.

டெல்லியில், அன்சல் பிளாசாவில் அகியூலா (Aquila) என்ற ஹோட்டல் உள்ளது. இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (19-09-2021) அன்று அனிதா சவுத்ரி என்ற பெண் சேலை அணிந்துக்கொண்டு சென்றார். அவரை அங்கிருந்த ஊழியர்கள் தடுத்துள்ளனர். மேலும், ‘பாரம்பரிய உடை அணிந்து வருகிறவர்கள் மட்டுமே ஹோட்டலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பாரம்பரிய உடைகள் பட்டியலில் சேலை இல்லை என்று ஹோட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்ததாகவும் அனிதா கூறியிருந்தார்.

இதுபோன்ற அவமரியாதையை தான் எங்கும் சந்தித்ததில்லை என்றும் இது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து, ஊழியரிடம் அவர் பேசும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாக பரவியது.

இதை பார்த்த பலரும், தங்கள் எதிர்ப்பையும், வன்மையான கண்டனத்தையும் பதிவு செய்து வருகின்றனர். பிரபல நடிகைகள் ரிச்சா சதா, மீரா சோப்ரா உட்பட பலர் இந்த சம்பவத்திற்கு கண்டனத்தை பதிவு செய்தனர்.

இந்நிலையில், அந்த ஹோட்டல் நிர்வாகம் இதுகுறித்து விளக்கம் ஒன்றையும் அது தொடர்பான வீடியோவையும் தற்போது வெளியிட்டுள்ளது. அதில், விருந்தினர் அனிதா சவுத்ரி ஹோட்டலுக்கு வந்தபோது, முன்பே நீங்கள் உங்களுக்கான இருக்கையை பதிவு செய்யவில்லை. எனவே கொஞ்சம் காத்திருங்கள் என்று மிகவும் சாந்தமாக கூறினோம். பிறகு அவரை எங்கு அமர வைப்பது என்று ஊழியர்கள் கலந்தாலோசித்தார்கள்.

 

ஆனால் அதற்குள் ரெஸ்டாரெண்டுக்குள் நுழைந்த அந்த விருந்தினர், எங்கள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதோடு மட்டுமில்லாமல், எங்கள் ஹோட்டல் மேலாளரையும் அவர் அறைந்தார்’ என்று தெரிவித்துள்ளது. அவர் மேலாளரை அறையும் வீடியோவையும் ஹோட்டல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்