சித்ரா வழக்கில் புதிய திருப்பம்.. இமயமலை சாமியார் யார் தெரியுமா? திகைத்துப்போன அதிகாரிகள்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இமய மலை சாமியாரிடம் தேசிய பங்குச் சந்தை தொடர்பான ரகசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட வழக்கில்,  இமயமலை பாபா யார் என்ற ரகசியம் கசிந்து உள்ளது.

Advertising
>
Advertising

தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) முன்னாள் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவராக இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணா. இவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பொறுப்பு வகித்தார். அதன்பின், சொந்த காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் பொறுப்பில் இருந்த போது, தேசிய பங்குச் சந்தையில் நிதி தொடர்பான முடிவுகள், நியமனங்கள் தொடர்பாக பல்வேறு முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இமயமலையில் உள்ளதாக கூறப்படும் சாமியாரின் கைப்பாவையாக சித்ரா ராமகிருஷ்ணா செயல்பட்டுள்ளார். அவர் சொல்கிறபடி அவர் செயல்பட்டுள்ளார் என்று செபி குற்றம் சாட்டியது.

சித்ரா ராமகிருஷ்ணன் மீது  அபராதம்

தேசியப் பங்குச்சந்தைக்கு ரூ.5 கோடிவரை இழப்பு ஏற்படுத்தியது, விதிமுறைகளைப் பின்பற்றாதது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை சித்ரா ராமகிருஷ்ணா செய்ததை செபி கண்டுபிடித்தது. இதையடுத்து, முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.3 கோடியும், முன்னாள் செயல் அதிகாரி ரவி நரேன், ஆலோசகர் ஆனந்த் சுப்ரமணியன், ஆகியோருக்கு தலா ரூ.2 கோடியும் அபராதமாக செபி விதித்தது.
சித்ரா ராமகிருஷ்ணா மூலம் தேசிய பங்குச்சந்தையை கட்டுப்பாட்டில் வைத்திருந்த அந்த இமயமலை சாமியார் யார் என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது.

இமயமலை சாமியார் யார்?

இதற்கு இதுவரை பதில் கிடைக்காமலேயே உள்ளது. இந்நிலையில், அப்படி ஒரு சாமியார் இல்லை என்றும்  மத்திய நிதியமைச்சகத்தின் முன்னாள் அதிகாரியாக அவர் இருக்கலாம் என்று தகவல் கசிந்துள்ளது.  முன்னாள் மத்திய நிதியமைச்சகத்தின் அதிகாரி கேப்பிடல் மார்கெட் சந்தையைச் சீர்படுத்தும் பணியில் இருந்திருக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. அதேவேளையில் இவர் கட்டாயம் இந்தியாவில் இருக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. இவர் சித்ரா ராமகிருஷ்ணன் எல்எஸ்ஈ அமைப்பில் உயர் பதவியை அடையப் பெரிய அளவில் உதவி செய்துள்ளதாக தெரிகிறது.

ஆனந்த் சுப்ரமணியன்

இந்த வழக்கை விசாரிக்கும் பலர் இந்தச் சாமியார் ஆனந்த் சுப்ரமணியன் தான் என்பதை உறுதி செய்து வழக்கை முடிக்க முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. ஆனந்த் சுப்பிரமணியனை முகம் தெரியாத சாமியார் என வைத்துகொண்டால், பங்குச்சந்தை தொடர்பான ரகசிய தகவல்களை வெளிநபருக்கு சித்ரா பகிர்ந்தார் என்ற முக்கிய குற்றச்சாட்டு வலுவிழந்துவிடும். சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு இ.மெயில் மூலம் ஆலோசனை வழங்கிய அந்த முகம் தெரியாத சாமியார் பங்குச்சந்தையில் நிபுணத்துவம் பெற்றவராக இருந்துள்ளார். ஆனந்த் சுப்பிரமணியனுக்கு அந்த அளவு நிபுணத்துவம் கிடையாது என்றும் கூறப்படுகிறது.

NSE, CHITRA RAMAKRISHNA, HIMALAYAS, SENSEX, SEBI, ANAND SUBRAMANIAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்