PF புதிய விதிகள்: இத உடனே செஞ்சிடுங்க… இல்லன்னா EPF பலன் எதுவும் கெடைக்காது..!



முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

EPF கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் வருகிற டிசம்பர் 31-ம் தேதிக்குள் புதிய விதிப்படி சில மாற்றங்களை செய்து முடிக்காவிட்டால் EPF பலன்களை வருகிற ஜனவரி 1-ம் தேதி முதல் பெற முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

EPF கணக்கு வைத்திருக்கும் அத்தனை பணியாளர்களும் தங்களது EPF கணக்கில் உடனடியாக நாமினி பெயரை இணைக்க வேண்டும். இந்த நாமினி பெயர் இணைக்கும் வேலையை வருகிற டிசம்பர் 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்ற உத்தரவும் EPFO-வால் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

நாமினி பெயரை இணைக்காவிட்டால் மத்திய அரசால் வழிநடத்தப்படும் EPF நிறுவனத்தின் பலன்களை வருகிற ஜனவரி 1-ம் தேதி முதல் பயன்படுத்த முடியாதபடி ஆகிவிடும். இந்த நாமினி பெயரை இணைக்கும் பணியை பணியாளர்கள் யார் வேண்டுமானாலும் ஆன்லைனிலேயே செய்ய முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்தியாவைப் பொறுத்த வரையில் மாத சம்பளம் வாங்கும் கிட்டத்தட்ட அத்தனைப் பணியாளர்களுமே பிஃஎப் கணக்கு வைத்து உள்ளார்கள். பலருக்கும் இந்த பிஎஃப் பணம் என்பது ஓய்வு பெறும் காலத்தில் பெரும் உதவியாக இருக்கும். பணியாளர் ஒருவரின் ஊதியத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்டத் தொகை பிடித்தம் செய்யப்பட்டு பிஎஃப் கணக்கில் சேர்க்கப்படும். இது அவசரத் தேவைக்கும் ஓய்வு பெறும் காலத்திலும் பெரும் உதவியாக இருக்கும்.

இதேபோல், பணியாளர் ஒருவர் பணியாற்றும் நிறுவனமும் இதற்காக ஒரு குறிப்பிட்ட ஒரு தொகையை அந்தப் பணியாளரின் கணக்கில் வைப்பு வைத்துவிடும். இதனால், வருகிற டிசம்பர் 31-ம் தேதிக்குள் பிஎஃப் கணக்கு வைத்து இருக்கும் அனைவரும் தங்களது நாமினி பெயரை சேர்த்து ஆக வேண்டும். இல்லையென்றால் இன்சூரன்ஸ், பென்சன் என எந்தப் பலன்களும் கிடைக்காமல் போய்விடும் சூழல் உருவாகும்.

நாமினி பெயர் என்பது பணியாளர் ஒருவருக்கு திடீரென எதிரபாராத அசம்பாவிதங்கள் நடந்துவிட்டால் அந்த சமயம் அவரது நாமினி அதாவது குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஒருவருக்கு அவரின் பிஎஃப் பணம் சென்று சேரும். கணக்கு வைத்திருக்கும் பணியாளரின் குடும்ப உறுப்பினருக்கு இந்த கணக்கின் மூலமாக இன்சூரன்ஸ், பென்சன் என அனைத்தும் கிடைக்கும்.

MONEY, EPFO, PF MONEY, PF NOMINEE, வருங்கால வைப்பு நிதி, பிஎஃப் பணம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்