இட்லி தெரியும் அதென்னப்பா ஃபிட்லி?.. ஒன்னு 90 ரூபாயாம்.. உணவு பிரியர்களிடையே வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉணவு பிரியர்களிடையே தற்போது வைரலாகி வருகிறது FIFA இட்லிகள். இந்த இட்லி தயாரிக்கும் வீடியோவும் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
Also Read | மிளகாய் பொடியுடன் வந்த போலி கிறிஸ்துமஸ் தாத்தா.. சர்ப்ரைஸ்-ன்னு காத்திருந்த பாட்டிக்கு வந்த சோதனை..
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விளையாட்டு கால்பந்து. சாதாரண போட்டிகளுக்கே மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அப்படியிருக்க உலகக்கோப்பை என்றால் சொல்லவா வேண்டும்? மத்திய கிழக்கு நாடான கத்தாரில் இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் கால்பந்து உலகக்கோப்பை நடைபெற்ற நிலையில், தற்போது கத்தாரில் துவங்கி நடைபெற்று வருகிறது.
இதனால் உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்கள் ஏக குஷியில் இருக்கின்றனர். உலகக்கோப்பை கால்பந்து தொடரை முன்னிட்டு அது தொடர்பான பல விஷயங்கள் தற்போது ட்ரெண்டாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது அந்த பட்டியலில் இணைந்துள்ளது இந்த FIFA இட்லி. வழக்கமான இட்லிகளை விட அளவில் சற்றே பெரியதாக இருக்கும் இவற்றின் மீது கால்பந்து அச்சு பதிக்கப்படுகிறது. தொடர்ந்து அவற்றின் மீது, நெய், பொடி உள்ளிட்ட கலவைகள் தூவப்படுகின்றன.
பார்ப்பதற்கு கால்பந்து போல காட்சியளிக்கும் இந்த இட்லிகள் கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். புதுச்சேரியில் உள்ள தனியார் உணவகத்தில் இந்த இட்லிகள் பரிமாறப்படுவதாக தெரிகிறது. மேலும், ஒரு FIFA இட்லியின் விலை 90 ரூபாய் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிதாக உணவுகளை ருசிக்கத் துடிக்கும் நபர்களுக்கு இந்த கால்பந்து இட்லி நல்ல தேர்வாக அமையும் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த FIFA இட்லி தயாரிக்கும் வீடியோ ஒன்றும் வெளியாகி சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் கால்பந்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற FIFA இட்லியை 'Fiddlies' எனக் குறிப்பிட்டிருக்கிறார் ஒருவர். இந்நிலையில், இந்த வீடியோ Foodies களிடையே வைரலாக பரவி வருகிறது.
Also Read | மார்க்கெட்டில் வைத்து கொடூரமாக பெண்ணை கொலை செய்த நபர்கள்.! வட இந்தியாவையே உலுக்கிய பரபரப்பு சம்பவம்..
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சுட சுட இட்லி ரெடி.. 3 ரூபாக்கு 2.. கூடவே ஸ்பெஷல் டோர் டெலிவரி வேற இருக்கு.. பட்டையைக் கிளப்பும் 70 வயது பாட்டி
- 'ஒரு ரூபாய்க்கு ஒத்த பைசா கூட கூட்டி விற்க மாட்டேன்...' 'கூடிப்போனா 100 ரூபாய் கிடைக்குது, அது போதும் எனக்கு...' கொள்கை மாறாத 'ஒரு ருபாய் இட்லி' பாட்டி...!
- '1 ரூபாய்க்கு இட்லியா?'.. 'கமலாத்தாள் பாட்டிக்கு உதவிய பிரபல நிறுவனம்'..'பிஹைண்ட்வுட்ஸ் வாசகரின் நெகிழவைத்த கடிதம்!'
- ‘சாகும் வரை 1 ரூபாய்க்கு தான் இட்லி விற்பேன்’.. நெகிழ்ச்சி அடைய வைத்த 85 வயது கமலாத்தாள் பாட்டி..!