2 வருஷத்துக்கு பொறியியல் கல்லூரிகள் துவங்க தடை.. AICTE அதிரடி.. என்ன காரணம்?
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் 2024 ஆம் ஆண்டு வரை புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்படாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) அறிவித்துள்ளது.
பொறியியல் கல்வி
உலக அளவில் ஒரு வருடத்திற்கு அதிக பொறியாளர்களை உருவாக்கும் நாடாக இந்தியா திகழ்கிறது. சராசரியாக இந்தியாவில் ஒரு கல்வி ஆண்டில் ஒரு மில்லியன் மாணவர்கள் பொறியியல் முடிக்கின்றனர். ஆனால் சமீபகாலமாக பொறியியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தற்போதைய கல்வி நிலை மற்றும் பொறியியல் மாணவர் சேர்க்கை குறித்து ஆராய ஐதராபாத் ஐஐடி தலைவர் பிவிஆர் மோகன் ரெட்டி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்தியாவில் தற்போதுள்ள வேலைவாய்ப்பு, கல்வி நிலைமை ஆகியவற்றை இந்த குழு ஆய்வு செய்தது. அதன் அடிப்படையில் 2024 ஆம் ஆண்டு வரை புதிய பொறியியல் கல்லூரிகளை துவங்க விதிக்கப்பட்ட தடையை தொடர இந்த குழு பரிந்துரை செய்திருக்கிறது.
பி வி ஆர் மோகன் ரெட்டி தலைமையிலான குழு அளித்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் 2024 ஆம் ஆண்டு வரை புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி கிடையாது என அறிவித்துள்ளது. மேலும் அந்த குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் 95 சதவீதம் முதல் 100 சதவீதம் மாணவர் சேர்க்கை கொண்ட கல்வி நிறுவனங்களில் 25% கூடுதல் திறன் அளிக்கவும் 80% முதல் 95% வரை மாணவர் சேர்க்கை உள்ள கல்வி நிறுவனங்களில் 15% கூடுதல் திறனையும் அளிக்க அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அனுமதித்திருக்கிறது.
சான்றிதழ்
மேலும் புதிய வழிகாட்டுதலில் மாணவர்களுக்கு பலவகையான நுழைவு மற்றும் வெளியேறும் விருப்பங்களை வழங்கியிருக்கிறது AICTE. அதன்படி முதலாம் ஆண்டு பொறியியல் படிப்பில் இருந்து வெளியேறும் மாணவர்கள் இளநிலை சான்றிதழையும் இரண்டாம் ஆண்டில் இருந்து வெளியேறும் மாணவர்கள் இளநிலை டிப்ளமோ சான்றிதழையும் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மூன்றாம் ஆண்டு பொறியியல் படிப்பில் இருந்து வெளியேறும் மாணவர்களுக்கு இளநிலை தொழிற்கல்வி சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாத்தி ரைடு... பள்ளி வாகனங்களில் அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி ஆய்வு..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- TN Budget 2022: உயர் கல்வி மாணவிகளுக்கு மாதாமாதம் ரூ.1000.. ஆனா இவங்களுக்கு மட்டும் தான்!
- “சார் ப்ளீஸ் போகாதீங்க”.. கடைசியா ஒரு தடவை ‘அந்த’ பாட்டை பாடுறோம்.. கண்ணீர் மல்க டீச்சருக்கு பிரியாவிடை..!
- "உங்க வீட்டுக்கு வந்தா சாப்பாடு போடுவீங்களா?".. வீடியோ காலில் CM கேட்ட கேள்வி.. நெகிழ்ச்சியில் நரிக்குறவ மக்கள் சொன்ன பதில்..!
- Russia – Ukraine Crisis : 800 இந்திய மாணவர்களை மீட்ட பெண் விமானி.. யார் இந்த மகாஸ்வேதா சக்கரவர்த்தி?
- இருக்குற இடத்துலயே பாதுகாப்பா இருங்க.. யாரும் வெளிய வர வேண்டாம்.. இந்திய மாணவர்களுக்கு தூதரகம் முக்கிய தகவல்..!
- "ரயில் ஏற விட மாட்டேங்குறாங்க.. துப்பாக்கியை காட்டி மிரட்டுறாங்க".. உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவர்கள் கதறல்..!
- கசிந்த ரஷ்யாவின் அடுத்த ப்ளான்.. கெடைக்கிற வண்டியை புடிச்சு உடனே அங்கிருந்து வெளியேறுங்க.. இந்திய தூதரகம் பரபரப்பு தகவல்..!
- கர்நாடகா ஹிஜாப் சர்ச்சை.. நோபல் பரிசு வென்ற பாகிஸ்தான் நாட்டின் மலாலா பரபரப்பு கருத்து..!
- ஒண்ணுமே தெரியலை ஒரே இருட்டா இருக்கு.. தலைகீழாக மாறி போன எக்ஸாம்.. பெற்றோர் செய்த செயல்!
- எங்களுக்கு ‘Online exam’ தான் வேணும்.. திடீரென அமைச்சர் வீட்டு முன் போராட்டம் நடத்திய மாணவர்கள்.. தடியடி நடத்தி கலைத்த போலீஸ்.. பரபரப்பு காட்சி..!