‘ஆல்பா வகையை விட ஆபத்தானது’!.. இந்தியாவில் ‘புதிய’ வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு.. ஆய்வாளர்கள் எச்சரிக்கை..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் மரபணு மாற்றமடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த இரண்டாவது அலையில், மரபணு மாற்றம் அடைந்த டெல்டா வகை கொரோனாவால் அதிக பாதிப்பு ஏற்பட்டது. இதுவரை இந்தியாவில் 2 கோடியே 88 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அதில், 3 லட்சத்து 47 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் பிரேசில், இங்கிலாந்து நாடுகளிலிருந்து இந்தியா வந்த சர்வதேச பயணிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் புதிய வகை மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. புனேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வு மையத்தில் (National Institute of Virology) நடத்தப்பட்ட சோதனையில் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வகை கொரோனா வைரஸ், அறிவியல் ரீதியாக B.1.1.28.2 என அழைக்கப்படுகிறது. இதற்கு அறிகுறிகளாக உடல் எடை இழப்பு, சுவாச குழாயில் வைரஸ்கள் பல்கி பெருகி, நுரையீரலில் புண்கள் ஏற்படுவது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

இந்த B.1.1.28.2 வகை கொரோனா வைரஸ், ‘டெல்டா’ வகை கொரோனாவை போன்றது என்றும், இங்கிலாந்தில் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட ‘ஆல்பா’ வகை கொரோனா வைரஸை விட இது ஆபத்தானதாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்