‘அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா’.. அறிகுறிகள் எப்படி இருக்கும்..? பழைய வைரஸை விட வீரியம் அதிகமா..?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பரிணாம மாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் மீண்டும் உலகை அச்சுறுத்தி வருகிறது.

இங்கிலாந்து நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால், அந்நாட்டில் மீண்டும் பொதுமுடக்கம் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய வகை கொரோனா வைரஸுக்கு ‘VUI-202012/01’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தனது அடிப்படை மரபியல் கூறுகளின் கட்டமைப்பில் இருந்து மாற்றம் பெற்றுள்ளது. பந்து போன்ற தோற்றத்தில் இருக்கும் கொரோனா வைரஸில் கொம்புகள் போல் தனித்தனியாக உள்ள ஸ்பைக்ஸில்தான் அந்த மரபியல் மாற்றம் நிகழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஸ்பைக்ஸ் ஜீன்தான் மனித உடலில் படிந்து உடல் உறுப்புகளின் செல்கள் மூலம் பரவுகிறது. தற்போது புதிய வகை கொரோனா வைரஸில், மரபியல் மாற்றம் அடைந்துள்ள ஸ்பைக்ஸ் ஜீன், மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தி திறனில் மறைந்து கொள்ளும் வகையில் உருமாற்றம் அடைந்திருப்பதாக இங்கிலாந்து அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய வகை கொரோனா வைரஸ் முந்தைய பெருந்தொற்றை விட 70 சதவீதம் வேகமாக பரவும் தன்மை கொண்டதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மாஸ்க் அணிவது, தனிநபர் இடைவெளி, அடிக்கடி கை கழுவுவது உட்பட ஏற்கனவே உள்ள நோய் தடுப்பு விதிமுறைகளே போதுமானது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்தியாவில் பரவுவதற்கு வாய்ப்பு குறைவு தான் என கூறப்படுகிறது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளே இந்த புதிய வகை கொரோனாவை கட்டுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிக குறைவு என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

புதிய கொரோனா வைரஸ் ஏற்கனவே உள்ள வைரஸில் இருந்து வேறுபட்ட அறிகுறிகளை ஏற்படுத்தும் என உறுதியாகச் சொல்வது மிக கடினம். இதுவரை புதிய கொரோனா வைரஸ் வேறுபட்ட அறிகுறிகளை ஏற்படுத்தவில்லை என்று நம்பப்படுகிறது. இதன் முதன்மை அறிகுறிகளாக தொடர்ந்து இருமல், தலைவலி, மார்பு வலிகள், காய்ச்சல், சுவை மற்றும் வாசனை இழப்பு உள்ளிட்டவைகள் கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்