பச்சிளங்குழந்தை 'செய்த' விஷயம்.. "ப்பா, அச்சு அசல் புஷ்பாவே தான்.." இணையத்தை கலக்கும் வீடியோ

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குழந்தை செய்த செயல் ஒன்றை, புஷ்பா படத்துடன் தொடர்புபடுத்திய வீடியோ ஒன்றை, ஐஏஎஸ் அதிகாரி தன்னுடைய ட்விட்டர் பக்ககத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகியிருந்த திரைப்படம் 'புஷ்பா'. சுகுமார் இயக்கியிருந்த திரைப்படத்தில், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த சமந்தாவின் 'ஓ அண்டவா' பாடல், 'சாமி சாமி' மற்றும் ஸ்ரீவள்ளி உள்ளிட்ட அனைத்து பாடல்களும் மிகப் பெரிய அளவில் ஹிட்டடித்திருந்தது.

புஷ்பா ஃபீவர்

அதே போல, நடிகர் அல்லு அர்ஜுன் தாடியை கோதி வசனம் பேசும் ஸ்டைலும், தோளைத் தூக்கி நடக்கும் விஷயங்களும் உலகளவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது. விராட் கோலி, பிராவோ, ஜடேஜா, டேவிட் வார்னர் உள்ளிட்ட பல கிரிக்கெட் வீரர்கள் கூட, அல்லு அர்ஜுனை போல தாடி கோதும் ஸ்டைலை மைதானங்களில் செய்து காட்டினர். இது ஒரு புறம் இருக்க, ஸ்ரீவள்ளி பாடலின் அல்லு அர்ஜுன் Trademark ஸ்டெப்பையும் சுட்டிக் குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை நடனமாடி, வீடியோவாக இன்றளவிலும் வெளியிட்டு வருகின்றனர்.

பச்சிளம்குழந்தையின் வீடியோ

ஊரே 'புஷ்பா' ஃபீவர் பிடித்துக் கிடக்கும் நிலையில், இப்போது மற்றொரு வீடியோ, ஒட்டுமொத்த உலகையும் மீண்டும் ஒரு முறை திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரியான அவனீஷ் சரண், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பச்சிளங்குழந்தையின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

புஷ்பா ஸ்டைல்

அதில், அந்த பச்சிளம் குழந்தை ஒரு சிறிய புன்னகையுடன், தனது தாடையைத் தடவுகிறது. அது அப்படியே பார்ப்பதற்கு, அல்லு அர்ஜுனின் தாடியைக் கோதுவது போலவே உள்ளது. அது மட்டுமில்லாமல், இந்த வீடியோவின் பேக்கிரவுண்டில் புஷ்பா படத்தின் வசனமும் இடம்பெறுகிறது.

 

ரசிகர்கள் கருத்து

மேலும், இந்த குழந்தையின் வீடியோ, பார்ப்பதற்கு கிராபிக்ஸ் போலவும் உள்ளது. இதனை குறிப்பிடும் நெட்டிசன்கள் பலவிதமான கருத்துக்களை குறிப்பிட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோவும், அதிகம் வைரலாகி வருகிறது.

PUSHPA THE RISE, ALLU ARJUN, VIRAL VIDEO, PUSHPA, SRIVALLI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்