இனி பாஸ்வேர்டு ஷேர் பண்ணா வேலைக்கு ஆகாது .. பிரபல ஓடிடியில் வரப்போகும் புதிய திட்டம்.?
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் பல ஓடிடி தளங்களை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வரும் நிலையில், அதிக பேர் பயன்படுத்தும் தளங்களில் ஒன்றாக, நெட்ஃப்ளிக்ஸ் பார்க்கப்பட்டு வருகிறது.
இதில், பல்வேறு உலக மொழிகளில் தயாரிக்கப்பட்ட படங்கள், வெப் சீரியஸ் என புதிது புதிதாக தொடர்ந்து பலவற்றை நெட்ஃப்ளிக்ஸ் வாடிக்கையாளர்களுக்கு வேண்டி வழங்கிக் கொண்டே இருக்கிறது.
அமெரிக்காவை தளமாக கொண்ட நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு, இந்தியா மட்டுமில்லாமல் உலகெங்கிலும் லட்சக்கணக்கான பயனர்கள் உள்ளனர்.
அதிரடி திட்டங்கள்
முன்னதாக, சமீபத்தில் தங்களுடைய மாத சந்தா பிளான்களை பயனர்களின் நலனுக்கு வேண்டி குறைத்து புதிய அறிவிப்பை நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டிருந்தது. மொபைலில் மட்டும் பார்க்கும் வசதிக்கு 199 ரூபாய் மாத சந்தாவாக இருந்த நிலையில், அதனை 149 ஆக குறைத்திருந்தது. இதே போல, டிவி, கணினி, லேப்டாப் ஆகியவற்றில் பார்ப்பதிலும் அதிரடி விலை மாற்றங்களை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் செய்திருந்தது.
புதிய பிளான் என்ன?
இந்நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் பயனர்களுக்கு வேண்டி, அந்நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அமல்படுத்த போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பொதுவாக, பயனர்கள் ஒருவரின் ஐடி மற்றும் பாஸ்வேர்டு கொண்டு அவரின் நண்பர்கள் என யார் வேண்டுமானாலும் நெட்ஃப்ளிக்ஸ் அக்கவுண்ட்டை பயன்படுத்தி, திரைப்படங்கள் உள்ளிட்டவற்றை பார்க்கலாம்.
நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்
சமீப காலமாக, இப்படி ஒரே ஒரு நெட்ஃப்ளிக்ஸ் அக்கவுண்டை கொண்டு, கட்டணம் செலுத்தாமல், பலரும் பயன்படுத்தும் வழக்கம், அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், கூடிய விரைவில் பாஸ்வேர்டுகளை பகிர்ந்து கொள்வதை அடிப்படையாக கொண்டு, கூடுதல் கட்டணம் வசூலிக்க, நெட்பிளிக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கூடுதல் கட்டணம்
நெட்ஃப்ளிக்ஸ் கணக்கை பிறருக்கு பகிரும் பட்சத்தில், இதற்காக எக்ஸ்டரா கட்டணம் வாங்க நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கு வேண்டி, மாதத்திற்கு 150 முதல் 250 ரூபாய் வரை, அதிக கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Netflix-ஐ புறக்கணித்த இந்தியர்கள்.. அகல பாதாளத்திற்கு செல்லும் பங்கின் விலை.. வீழ்ச்சிக்கு காரணம் என்ன?
- Netflix: ‘இனி சின்ராச கையில பிடிக்க முடியாதே’.. வாடிக்கையாளர்கள் மனசு குளிர்ற மாதிரி வந்த ‘அசத்தல்’ அறிவிப்பு..!
- 'எவளோ தாராள மனசு பாரேன்'... 'Money Heist வெப் சீரிஸ் பாருங்க'... ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கிய பிரபல இந்திய நிறுவனம்!
- 'Amazon Prime, Netflix' போன்ற OTT தளங்களுக்கு கட்டுப்பாடு'... 'இனிமேல் வெப் சீரிஸில் இது கட்டாயம்'... மத்திய அரசு!
- “வருது.. வருது”.. ‘ஓடிடியில்’ இதுவரைக்கும் இல்லாம இருந்த அந்த விஷயம்.. ‘இப்போ வருது!’ - மத்திய அமைச்சர் அதிரடி!
- ஆஹா..! பீட்சா சாப்பிட்டு ‘நெட்பிளிக்ஸ்’ பார்க்க சம்பளம்.. இந்த ‘வேறலெவல்’ வேலைக்கு ஆட்கள் தேடும் கம்பெனி..!
- கூகுள்... ஆப்பிள்... நெட்பிளிக்ஸ் நிறுவனங்களில் வேலைக்கு சேர்வது எப்படி?.. வெளியான அதிர்ச்சி தகவல்!.. வாயடைத்துப் போன பட்டதாரிகள்!
- 'ஓடிடிக்கு படையெடுக்கும் முன்னணி நட்சத்திரங்கள்'... 'அல்டிமேட் ஆஃபரை அறிவித்துள்ள நெட்ஃபிளிக்ஸ்'... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
- ‘எனக்கு இது ரொம்ப புடிச்சிருக்கு’... ‘திடீரென திருநம்பியாக மாறிய’... ‘பிரபல ஹாலிவுட் நடிகை’... ‘வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்’!!!
- 'விஜய் ஃபேன்ஸ்-க்கு ஒரு ஹாட் அப்டேட்...' 'மாஸ்டர்' திரைப்படம் எதில் வெளியாகிறது...? - தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு...!