Nepal Plane Crash : விமான விபத்தில் 72 பேர் பலி.. பயணி எடுத்த லைவ் வீடியோவில் பதிவான திக் திக் நிமிடங்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நேபாளத்தில் விமான விபத்து ஏற்பட்ட நிலையில், உலக நாடுகள் அனைத்தையும் அதிர வைத்துள்ளது. அப்படி இருக்கையில், அதில் பயணம் செய்த நபர் கடைசியாக எடுத்த வீடியோ, தற்போது பலரையும் பீதியில் உறைய வைத்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | “ரசிகர்கள் இப்படி பண்ணா, அடுத்த 4,5 வருடம் கழித்து இந்த விஷயமே இருக்காது!” - திருப்பூர் சுப்பிரமணியம் ஆரூடம்!

எட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, சுமார் 68 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்களுடன் நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டுள்ளது. அப்போது தரையிறங்கும் போது ஒரு சில நிமிடங்கள் முன்பாக திடீரென தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் இந்தியர்கள் 5 பேர் உட்பட அனைவரும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாக, தரையிறங்க சில நிமிடங்கள் இருக்கும் போது தொழில்நுட்ப கோளாறு உருவானதால் தரையில் மோதி விபத்து நடந்ததாக தகவல்கள் கூறுகின்றது. அதே போல, அங்கே நிலவிய கால நிலையும் விமான விபத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும், இந்த விபத்தில் பலியான 68 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், விபத்து நடந்த விமானத்தில் பயணம் மேற்கொண்ட இந்தியர் ஒருவர், விபத்து நடக்க கொஞ்ச நேரம் முன்பு அவர் எடுத்த லைவ் வீடியோ, இணையத்தில் அதிகம் வைரலாகி பலரையும் பீதியில் உறைய வைத்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், காஜிப்பூர் என்னும் பகுதியை சேர்ந்த சில பயணிகள் இந்த விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளனர். அப்போது விபத்து நடக்க போகிறது தெரியாது என்ற சூழலில், அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக ஜன்னல் இருக்கையில் அமர்ந்த படி, வெளியே கேமராவில் காட்டுகிறார். அதற்கடுத்த கொஞ்ச நேரத்தில் விபத்து நடந்ததாக தெரிகிறது.

நேபாள விமான விபத்து தொடர்பான செய்தி, தற்போது பல நாடுகள் மத்தியில் கடும் அதிர்வலைகளை உண்டு பண்ணி இருந்த நிலையில், தற்போது உள்ளே இருந்த பயணி எடுத்த லைவ் வீடியோவும் அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read | "ரெக்கார்ட் உருவாக்குறது தான் எங்க வேலையே".. ஒரு நாள் போட்டியில் முதல் முறை.. வரலாற்றை மாற்றி எழுதி சாதனை படைத்த இந்திய அணி!!

NEPAL, PLANE CRASH, NEPAL PLANE CRASH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்