நண்பரின் இறுதி சடங்கில் கலந்துகிட்டு திரும்பிய 3 பேர்.. விமான விபத்தில் சிக்கி எதிர்பாராத விதமாக உயிரிழந்த சோகம்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் சுமார் 68 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்களுடன் தரையிறங்க முற்பட்ட விமானம் ஒன்று, விபத்தில் சிக்கய சம்பவம், உலகெங்கிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

Advertising
>
Advertising

Also Read | 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யுடன் அரசியல் கூட்டணி?.. சீமான் சொன்ன 'நச்' பதில்!

இந்த கோர விபத்தில் இந்தியர்கள் 5 பேர் உட்பட விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாக, தரையிறங்க சில நிமிடங்கள் இருக்கும் போது தொழில்நுட்ப கோளாறு உருவானதால் தரையில் மோதி விபத்து நடந்ததாக தகவல்கள் கூறுகின்றது. அதே போல, அங்கே நிலவிய கால நிலையும் விமான விபத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதற்கு மத்தியில் விபத்து நடந்த விமானத்தில் பயணம் மேற்கொண்ட இந்தியர் ஒருவர், விபத்து நடக்க கொஞ்ச நேரம் முன்பு எடுத்த லைவ் வீடியோவும் இணையத்தில் அதிகம் வைரலாகி பலரையும் பீதியில் உறைய வைத்திருந்தது. மேலும் கடந்த 30 ஆண்டுகளில் நடந்த மிக கொடூரமான விபத்து என்றும் இதனை நேபாள விமானத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

இந்நிலையில், இந்த விமானத்தில் பயணித்து உயிரிழந்த சில பயணிகள் குறித்து உருக்கமான தகவல்களும் தற்போது வெளியாகி உள்ளது.

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தின் அனிக்காட் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் மேத்யூ பிலிப். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை நேபாளத்தில் பணிபுரிந்து வந்ததாக தகவல்கள் கூறுகின்றது. இதனைத் தொடர்ந்து அவர் கேரளா வந்துள்ள நிலையில், அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்காக தொடர்ந்து அவர் சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில், சமீபத்தில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இதனை அறிந்ததும் நேபாளத்தில் பிலிப் இருந்த போது அவருக்கு பழக்கமாக இருந்த நண்பர்களான ராஜு தாக்குரி, ரபின் ஹமால், அனில் ஷாஹில், ஷரன் ஷாய் மற்றும் சுமன் தாப்பா உள்ளிட்டோர் அவரது மரண செய்தி அறிந்து கேரள மாநிலம் வந்துள்ளனர்.

மேத்யூ பிலிப்பின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட அவர்கள் ஐந்து பேரும் முடிவடைந்த பின்னர் அங்கிருந்து கிளம்பியதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து ராஜு, ரபின் மற்றும் அனில் ஆகிய மூன்று பேர் மட்டும் பொக்காராவுக்கு விமானம் மூலம் பயணித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. அப்படி அவர்கள் பயணித்த விமானம் விபத்தில் சிக்க மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்து போயினர்.

நண்பரின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு திரும்பிய மூன்று பேர் பரிதாபமாக விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த விஷயம், பத்தனம்திட்டா பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Also Read | "இப்டி ஒரு கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது".. விமானியாக இருந்து விபத்தில் உயிரிழந்த கணவர்.. அதே மாதிரி 16 வருஷம் கழிச்சு உயிரிழந்த பெண் விமானி!!

NEPAL, NEPAL PLANE CRASH, FRIEND, FRIEND FUNERAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்