நேபாள விமான விபத்தில் பலியான பணிப்பெண்.. கடைசியா பகிர்ந்த வீடியோ.. அவங்க அப்பா சொல்லிய அதிர்ச்சி தகவல்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நேபாளத்தில் நிகழ்ந்த விமான விபத்து, உலக நாடுகள் பலவற்றையும் கவலை கொள்ள செய்திருக்கிறது. இந்நிலையில் அதில் பணிபுரிந்த விமான பணிப்பெண்ணின் வீடியோ ஒன்று இணையத்தில் பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | 100 வருஷமா பொங்கலே கொண்டாடாத மக்கள்.. வினோத கிராமத்தின் திகில் பின்னணி..!

கடந்த 15 ஆம் தேதி எட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, சுமார் 68 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்களுடன் நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டுள்ளது. அப்போது தரையிறங்கும் போது ஒரு சில நிமிடங்கள் முன்பாக திடீரென தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் இந்தியர்கள் 5 பேர் உட்பட அனைவரும் உயிரிழந்தனர். முன்னதாக, தரையிறங்க சில நிமிடங்கள் இருக்கும் போது தொழில்நுட்ப கோளாறு உருவானதால் தரையில் மோதி விபத்து நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல, அங்கே நிலவிய கால நிலையும் விமான விபத்துக்கு ஒரு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் அந்த விமானத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றிய ஓஷின் அலே மாகர் என்னும் இளம் பெண்ணின் கடைசி வீடியோ சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. நேபாளத்தில் உள்ள ஏர் ஹோஸ்டஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற ஓஷின் கடந்த இரு ஆண்டுகளாக யேட்டி விமான நிறுவனத்தில் ஏர் ஹோஸ்டசாக பணிபுரிந்து வந்துள்ளார்.

டிக் டாக் பக்கத்திலும் வீடியோக்களை ஓஷின் பகிர்ந்து வந்தார். விமான விபத்துக்கு முன்னரும் ஒரு வீடியோவை பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோ தான் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. ஓஷினின் தந்தை மோகன் ஓய்வு பெற்ற இந்திய ராணுவ வீரர் ஆவார். கடைசியாக ஓஷின் வேலைக்கு சென்ற தினத்தில் மோகன் வேலைக்கு செல்ல வேண்டாம் எனவும் வீட்டில் மகர சங்கராந்தி கொண்டாட வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், தான் வேலைக்கு சென்று வீடு திரும்பியவுடன் பண்டிகையை கொண்டாடலாம் என ஓஷின் சொல்லியதாகவும் இப்போது அவர் தன்னை விட்டு நிரந்தரமாக பிரிந்து சென்றுவிட்டதாகவும்  உருக்கத்துடன் ஊடகங்களில் மோகன் குறிப்பிட்டிருக்கிறார்.

Also Read | "அந்த 2 பேர் தான் வெற்றிக்கே காரணம்".. SAT20 லீக்கின் JSK VS PC மேட்ச் பத்தி ஸ்ரீகாந்த்தின் Fire ஆன விமர்சனம்..!

NEPAL, PLAN CRASH, NEPAL PLAN CRASH, AIR HOSTESS, NEPAL PLAN CRASH AIR HOSTESS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்