'இந்தியாவிற்கு செக் வைக்க திட்டமா'?... 'வேற நாட்டுப் பெண்ணை கல்யாணம் செய்தால் வரப்போகும் சிக்கல்'... புதிய உத்தரவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நேபாள அரசு கொண்டு வந்துள்ள புதிய மசோதா, அந்நாட்டு இளைஞர் அயல்நாட்டுப் பெண்ணை திருமணம் செய்தால் அவருக்குக் குடியுரிமை கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தின் தெற்கே தெரய் பிராந்தியத்தில் மாதேசி இன ஆண்கள் பிஹார் எல்லையில் இருக்கும் பெண்களை மணப்பது, வாடிக்கையான ஒரு நிகழ்வு ஆகும். இதைத் தடுக்கும் விதமாக இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த மசோதாவின் படி, நேபாள நாட்டு இளைஞரை மணக்கும்  பெண்ணுக்கு 7 ஆண்டுகளுக்குப் பிறகே குடியுரிமை வழங்கப்படும்.

திருமணமான 7 ஆண்டுகளுக்கு நேபாளில் இருக்க உரிமையையும் அதன் பிறகு குடியுரிமையை வழங்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. இந்த 7 ஆண்டுகளில் அனைத்து உரிமைகளும் திருமணமாகிச் சென்ற பெண்களுக்கு உண்டு. கல்லூரியில் சேர்ந்து பட்டப்படிப்பும் படிக்கலாம். ஆனால்  7 ஆண்டுகளுக்குப் பிறகு மணப்பெண்ணுக்குத் தேசிய அடையாள அட்டை வழங்கப்படும்.

ஏற்கனவே இந்தியா, சீனா இடையே பிரச்சனை நிலவி வரும் நிலையில், நேபாள அரசு தொடர்ந்து இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே இந்த மசோதா கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை ஒப்புதலுடன் நேபாள நாடாளுமன்றம் இந்த மசோதாவைத் தாக்கல் செய்த நிலையில், நேபாள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்