ஒரு காலத்துல 'Employee'..இப்போ பணக்காரர் பட்டியலில் பெயர்.. இந்தியாவையே திரும்பி பார்க்க வெச்ச பெண்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சமீபத்தில் இந்தியாவின் பணக்காரர்கள் தொடர்பான பட்டியல் வெளியிடப்பட்டிருந்த நிலையில், இதில் இடம்பெற்றுள்ள பெண் தொடர்பான செய்தி, பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | 6 ஆவது திருமணம் முடிந்த 15 நாட்களுக்குள்.. 7 ஆவது திருமணத்திற்கு ரெடி ஆன பெண்.. கட்டம் கட்டி தூக்கிய 6 ஆவது கணவர்

2022 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலை IIFL Wealth Hurun சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

இதில் 336 வது இடத்தை இந்திய வம்சாவளியான நேஹா நர்கெடெ என்ற பெண் பிடித்துள்ளார்.

இந்திய அமெரிக்கரான நேஹா, கடந்த 2018 ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலகின் தொழில்நுட்பத்தின் தலைசிறந்த 50 பெண்கள் பட்டியலிலும் இடம் பெற்றிருந்தார். அது மட்டுமில்லாமல், அமெரிக்காவில் சிறந்த தொழில் முனைவோர் பட்டியலிலும் 57 வது இடத்தில் உள்ளார் நேஹா.

தற்போது 37 வயதாகும் நேஹா, மகாராஷ்டிர மாநிலம், புனேவில் பிறந்த நிலையில், புனே இன்ஸ்டிட்யூட் ஆப் கம்ப்யூட்டர் டெக்னாலஜி மற்றும் ஜார்ஜியா இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜியில் கல்வி பயின்றுள்ளார். தற்போது இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 336 வது இடத்தை நேஹா பிடித்துள்ளதை அடுத்து, அவரது சொத்து மதிப்பு 4700 கோடிகள் வரை இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும் நேஹா இந்த இடத்திற்கு எப்படி உயர்ந்தார் என்பதும் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருக்கும் வகையில் அமைந்துள்ளது.

தற்போது தொழில் முனைவோர், முதலீட்டாளர் மற்றும் ஆலோசராக பணியாற்றி வரும் நேஹா, முன்னதாக Oracle மற்றும் Linkedin உள்ளிட்ட நிறுவனங்களில் ஊழியராக பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னர் அங்கிருந்து வெளியேறி வந்த நேஹா, Apache Kafka மற்றும் CTO நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆகவும் மாறி உள்ளார்.

ஒரு காலத்தில் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்த இந்திய வம்சாளிப் பெண்ணான நேஹா நர்கெடெ, தற்போது இந்தியாவின் பணக்காரர் பட்டியலில் நுழைந்திருப்பதால், பலரும் அவரது கடின உழைப்பை பாராட்டி வருகின்றனர்.

Also Read | பாழடைந்த வீட்டுக்குள் எடுத்த புகைப்படம்... "கொஞ்ச நாள் கழிச்சு திருப்பி பாக்குறப்போ".. கதி கலங்க வைத்த பின்னணி!!

NEHA NARKHEDE, INDIA RICH LIST FOR 2022

மற்ற செய்திகள்