'அவங்க எங்களோட நட்சத்திர ஆங்கர்'.. சேனலை கலங்கவைத்த பிரபல செய்தி வாசிப்பாளரின் 'மரணம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பிரபல தொலைக்காட்சி நிறுவனமான தூர்தர்ஷனின் செய்தி வாசிப்பாளர் நீலம் சர்மா, ஓராண்டு காலமாக புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார்.

'அவங்க எங்களோட நட்சத்திர ஆங்கர்'.. சேனலை கலங்கவைத்த பிரபல செய்தி வாசிப்பாளரின் 'மரணம்'!

இதுகுறித்து தமது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் தூர்தர்ஷன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, நீலம் சர்மா அந்நிறுவனத்தில் 1995-ஆம் ஆண்டு இணைந்து சுமார் 20 வருடங்களுக்கு நெருக்கமாக பணிபுரிந்ததாகவும், தமது சேனலின் நட்சத்திரத் தொகுப்பாளினியாகவும் இருந்துள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேஜஸ்வனி, பாடி சார்ச்சா உள்ளிட்ட பிரபலமான பல நிகழ்ச்சிகளை நீலம் சர்மா தூர்தர்ஷனில் வழங்கிக் கொண்டிருந்தார். மட்டுமன்றி, சமூக முன்னேற்றத்துக்காக பாடுபட்ட பெண்களுக்கு வழங்கப்படும் அரிதான விருதான நரிசக்தி புரஷ்கார் விருது கடந்த ஆண்டு நீலம் சர்மாவுக்கு குடியரசு தலைவரால் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நீலம் சர்மாவின் இறப்புக்கு தூர் தர்ஷன் செய்தி நிறுவனம் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளது.

DOORDARSHAN, NEWS, ANCHOR, DEAD, NEELAMSARMA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்