2 'பல்பு' எரிஞ்சதும், கொஞ்ச நேரம் 'டிவி' பாத்ததும் குத்தமா?... 'கரண்ட்' பில் பாத்து ஒரு நிமிஷம் 'தலையே' சுத்திருச்சு!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநிலம் ராஜக்கோடு பகுதியில் சிறிய வீடு ஒன்றில் வசிப்பவர் ராஜாம்மா. ஏலக்காய் தோட்டத்தில் பணிபுரிந்து வரும் இவரது வீட்டில் இரண்டு மின் விளக்குகள் மற்றும் டிவி மட்டுமே பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.
வழக்கமாக அனைத்து மாதங்களிலும் சுமார் 200 முதல் 300 ரூபாய் வரை ராஜாம்மா மின் கட்டணம் செலுத்தி வந்த நிலையில் தற்போது வந்த மின் கட்டணத்தை கண்ட அவர் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார். வழக்கமான கட்டணத்தில் சுமார் 40 மடங்கு அதிகரித்து அதாவது, 11,359 ரூபாய் மின் கட்டணமாக வந்துள்ளது. அந்த பில்லில், ரூபாய் 5601 மட்டும் டோர் லாக் அட்ஜஸ்ட்மென்ட் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. டோர் லாக் அட்ஜஸ்ட்மென்ட் கடந்த நான்கு மாத பயன்பாட்டில் பாதியளவு கணக்கிடப்படுவதாக கேரளா மின்வாரியம் தெரிவித்திருந்தது.
இந்த மின்கட்டணம் குறித்து விளக்கம் தெரிவித்த கேரள மின்வாரியம், 'மின் இணைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் ஏற்பட்ட மின் இழப்பால் தான் மின் பயன்பாட்டுக் கட்டணம் அதிகமாகியுள்ளது. அந்த பகுதியிலுள்ள மேலும் சில வீடுகளிலும் இது போன்ற புகார்கள் எழுந்துள்ளது. அனைத்து புகார்களையும் விசாரித்து வருகிறோம். மீட்டர் பாக்சில் ஏற்பட்ட பிரச்சனை மற்றும் ரீடிங் அட்ஜஸ்ட்மென்ட் மூலம் தான் இந்த தவறு நிகழ்ந்துள்ளது. அடுத்தடுத்து மாதங்களில் வரும் மின் கட்டங்களில் அதிகப்படியான மின் பயன்பாட்டுத் தொகை சரி செய்யப்படும்' என கேரள மின்வாரியம் விளக்கமளித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மிக 'எளிமை'யான முறையில்... நடந்து முடிந்த 'முதல்வர்' வீட்டுக் 'கல்யாணம்'!
- '33 கோடியே ஒண்ணு...' 'தாயே கொரோனா...' உனக்கு 'முக்கால பூஜை' நடத்துறோம்... 'கொஞ்சம் அமைதியா இரு...' 'சேட்டனின்' வேற லெவல் 'முயற்சி...'
- 'அவர் முகத்த ஒரு தடவ எனக்கு காட்டுங்களேன்...' 'கதறிய மனைவிக்கு கடைசியில...' கணவர் இறந்து போன விஷயமே இப்படி தான் தெரிஞ்சுருக்கு...!
- 'கொரோனாவால் தள்ளி போன திருமணம்'... 'கேரள முதல்வர் பினராயி விஜயன் மகளுக்கு டும் டும் டும்'... 'மாப்பிள்ளை யார் தெரியுமா'?
- 'வெளிநாட்டில்' உயிரிழந்த 'கணவர்'... அடுத்த நாளே மனைவிக்கு 'கொழந்த' பொறந்துருக்கு... மனதை நொறுக்கிய 'துயரம்'!
- ‘E-Pass கிடைக்கல பாஸ்’!.. கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கும், கேரளா பெண்ணுக்கும் நடந்த ‘சுவாரஸ்ய’ கல்யாணம்..!
- 'யானை' சாப்பிட்டது 'அன்னாச்சி பழம்' அல்ல... வெளியானது 'அட்டாப்ஸி ரிப்போர்ட்...' 'மத்திய அமைச்சகம்' வெளியிட்ட 'புதிய தகவல்...'
- "என்ன வந்தாலும் 'படிப்ப' மட்டும் விட்டுடாத"... வீட்டின் 'மேற்கூரையில்' இருந்து படித்த 'மாணவி'... கிடைத்த 'உதவி'... குவியும் 'பாராட்டுக்கள்'!
- 'கட்டின புருஷன்னு நம்பி வந்தனேடா!'.. மனைவியை மது அருந்தச்செய்து... நண்பர்களோடு 'படுபாதக' செயலைச் செய்த கொடூரன்!.. நெஞ்சை உலுக்கிய பயங்கரம்!
- "ஒரு ஆளை பிடிச்சாச்சு..." "இன்னும் ரெண்டு பேரு இருக்காங்க..." 'யானைக்கு' நியாயம் 'கிடைத்தே தீரும்...'