அந்த 'செல்ஃபி' நெட்ல வைரல் ஆனதால தான் அவங்க போட்ட 'திட்டம்' நடக்கல...! ஆக்சுவலா அவங்க மொதல்ல போட்ட 'மாஸ்டர் பிளான்' என்ன தெரியுமா...? - 'ஷாக் தகவலை' சொன்ன நவாப் மாலிக்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்யன் கான் வழக்கில் பேரம் பேசப்பட்ட விஷயம் குறித்து அடுக்கடுக்கான புகார்களை எடுத்து வைத்துள்ளார் நவாப் மாலிக்.

Advertising
>
Advertising

கடந்த மாதம் அக்டோபர் 3-ஆம் தேதி கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஷாருக்கான் மகன் உட்பட 8 பேர் போதைத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

அதோடு, இந்த சம்பவம் தொடர்பாக இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் நாவப் மாலிக் போதைத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் மீது பல அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை கூறினார். ஷாருக்கான் மகனை டார்கெட் செய்யவேண்டும் என்றே இது மாதிரி போலியான நாடகங்கள் நடைபெறுவதாகவும், சுமார் ரூ.25 கோடி பேரம் பேசியதாகவும் கூறினார்.

இந்நிலையில், தற்போது நாவப் மாலிக் ஆர்யன்கானை முதலில் கடத்த முயற்சி செய்ததாக புதிய செய்தி ஒன்றை கூறியதோடு கடத்தும் திட்டத்தில் சமீர் வான்கடேவுக்கு பங்கு உண்டு என கூறியுள்ளார்.

இதுகுறித்து மும்பையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் நவாப் மாலிக், 'ஷாருக்கான் மகன் விஷயத்தில் நடந்த எல்லாமே ஒரு நாடகம் தான். பணம் பறிக்கும் நோக்கத்துடன் முதலில் ஆர்யன் கானை கடத்தும் திட்டத்துடன் தான் சொகுசு கப்பலில் போதை பொருள் விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்திற்கு முக்கிய மூளையாக இருந்தவர் பா.ஜ.கா-வை சேர்ந்த மோகித் பாரதியா. மோகித்தும்,போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே ஒஷிவாராவில் உள்ள கல்லறை தோட்டத்தில் சந்தித்து பேசியுள்ளார். அந்த இடத்தில் போலீசாரின் கண்காணிப்பு கேமரா வேலை செய்யாததால் அவர் சந்தித்த காட்சி கிடைக்கவில்லை.

 முதலில் ஆர்யன் கானை கடத்தி அதன் மூலம் ரூ.25 கோடி பேரம் பேசலாம் என்றிருந்தது. ஆனால் திட்டம் வேறுமாறி சென்று இப்போது, ரூ.18 கோடி இறுதி செய்யப்பட்டுள்ளது. ரூ.50 லட்சம் வழங்கப்பட்டு இருந்தது.

ஆனால் கிரன் கோசவி, போதை தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆர்யன் கானுடன் எடுத்த 'செல்ஃபி' சமூகவலைதளங்களில் பரவியதால் அவர்களின் திட்டம் கைகூடாமல் போனது. குழந்தையை கடத்தி, பணம் கேட்டு மிரட்டினால் பெற்றோர் கொடுக்கத்தான் செய்வார்கள்.

ஆர்யன் கானை மாட்டி விடவே அவரை சொகுசு கப்பலுக்கு பிரதிக் கப்பா, ஆமீர் பர்னிச்சர்வாலா ஆகியோர் அழைத்து சென்று உள்ளனர்' எனக் கூறியுள்ளார்.

NAWAB MALIK, ARYAN KHAN, DRUG, SRK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்