டோல்கேட்டில் குடுமிப்பிடி சண்டை போட்ட பெண்கள்.. ஏன் கடைசிவரை யாருமே தடுக்கல.. பரபரப்பு சம்பவம் குறித்து நெட்டிசன்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இன்றைய காலகட்டத்தில் எங்கு எது நடந்தாலும் அவை இணையத்துக்கு முதலில் தெரியப்படுத்தப்படுகின்றன.

Advertising
>
Advertising

மக்கள் ஒவ்வொருவரின் கைகளிலும் செல்போன்கள் இருப்பதால் ஒரு குறிப்பிட்ட நிகழ்வு அல்லது பிரச்சினை குறித்த விஷயங்கள் வீடியோக்களாக பதிவாகின்றன. காவல்துறையினரிடத்தில் பயணிகள் செய்யக்கூடிய வாக்குவாதங்கள், பொதுமக்கள் செய்யக்கூடிய வாக்குவாதங்கள் என பல வீடியோக்களை இணையதளங்களில் அவ்வப்போது காண முடிகிறது. அந்த வகையில் அண்மையில் ஒரு குறிப்பிட்ட டோல்கேட்டில் இரண்டு பெண்கள் ஆக்ரோஷமாக ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் வீடியோவை பார்க்க முடிகிறது.

வைரலான இந்த வீடியோவில் இரண்டு பெண்களும் ஒருவருக்கொருவர் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபடுவதை காண முடியும். ஆனால் இந்த வீடியோவில் இருக்கும் இன்னொரு விஷயம், இவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் பொழுது சுற்றி நிற்கும் ஆண்கள், பெண்கள் என அனைவருமே கிட்டத்தட்ட செல்போன்களை வைத்துக்கொண்டு வீடியோ எடுத்துக் கொண்டும் அமைதியாக நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டும் இருப்பதையும் காண முடியும். வைரலாகும் இந்த வீடியோவை சோசியல் மீடியாவில் பார்த்த பலரும் இந்த வீடியோ தொடர்பான பல விதமான கருத்துக்களை பகிர்ந்து இருக்கின்றனர்.

அதன்படி, இரண்டு பெண்கள் ஒரு டோல்கேட்டில் சண்டை போடுகிறார்கள், அதில் ஒருவர் பயணி, இன்னொருவர் அந்த டோல்கேட் ஊழியராக இருக்கக்கூடிய பெண். இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளக்கூடிய பதைபதைப்பு சம்பவம் நடக்கிறது. ஆனால் சுற்றி நின்று இவ்வளவு பேர் வேடிக்கை பார்க்கிறார்கள், அதிலும் சிலர் வீடியோ மட்டுமே எடுத்துக் கொண்டிருக்கிறார்களே.. அங்கிருந்தவர்களை சண்டையை தடுக்க முயற்சித்து அவர்களை விலக்க வேண்டாமா? ஏன் யாரும் அந்த சண்டையை தடுப்பதற்கு முன்வருவதாக தெரியவில்லை என பல கருத்துக்களை மக்கள் முன்வைத்து வருகின்றனர்.

அதே சமயம் இன்னும் சிலர், இப்படி வீடியோ எடுத்து பதிவிட்டால்தான் சம்பந்தப்பட்ட இரண்டு பேரில் யார் ஒருவர் இந்த பிரச்சனைக்கு மூல காரணம் என்பதும் பேசப்படும், இது போன்ற எந்த பிரச்சனையையும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களுக்கு கொண்டு வருவது மூலம், அந்த பிரச்சனை பொதுவெளியில் பேசப்படுகிறது. இதனால் பல முக்கிய துறைகளில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அவை சரி செய்யப்படுவதையும் காணமுடிகிறது. எனவே இது போன்ற வீடியோக்கள் வருவது தவறில்லை, அதேசமயம் அந்தந்த சூழலில் சுற்றி இருக்கும் மனிதர்கள் என்ன பொறுப்பை செய்ய வேண்டுமோ.. அதை செய்ய வேண்டும் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பிட்ட அந்த வீடியோ நாசிக் பகுதியில் இருக்கக்கூடிய ஒரு டோல் பிளாசாவில் நடந்த சம்பவத்தைப் பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

NASHIK, NASHIK TOLL FIGHT, NASHIK TOLL PLAZA WOMEN FIGHT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்