"நாட்டின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து செயல்படுவோம்.." ஸ்டாலினுக்கு 'வாழ்த்து' சொல்லி.. பிரதமர் 'மோடி' போட்ட 'ட்வீட்'!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தமிழக சட்டமன்ற தேர்தல், கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதியன்று நடைபெற்றிருந்த நிலையில், இதற்கான வாக்கு எண்ணிக்கை, தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில், ஸ்டாலின் தலைமையிலான திமுக, சுமார் 160 தொகுதிகள் வரை முன்னிலையில் உள்ள நிலையில், அடுத்த ஆட்சியை ஸ்டாலின் அமைக்கப் போகிறார் என்பது உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் அடுத்த முதல்வராகவுள்ள ஸ்டாலினுக்கு, பல அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஸ்டாலினின் வெற்றிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து ட்வீட் ஒன்றைச் செய்துள்ளார். 'தமிழக சட்டமன்ற தேர்தலில், வெற்றி பெற்றதற்காக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களைக் கூறிக் கொள்கிறேன். நாட்டின் முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்காகவும், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும், மேலும் கொரோனா என்னும் கொடிய தொற்றினை தோற்கடிக்கவும் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்' என தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

 

தமிழகத்தில், அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக, தற்போது வரை 3 முதல் 4 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்