"சிங்கிள்ஸ்க்கு வணக்கம்"... வைரலாகும் அமைச்சரின் ஜாலி பதிவு.. ஆர்வமான முரட்டு சிங்கிள்ஸ்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நாகலாந்து அமைச்சர் டெம்ஜென் இம்னா அலோங்-ன் சமீபத்திய 'சிங்கிள்' பதிவு இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

                       Images are subject to © copyright to their respective owners.

Also Read | Hardik Pandya : பிரம்மாண்டமாக நடைபெற்ற பாண்ட்யாவின் திருமணம்.. வீடியோ..!

நாகாலாந்தை சேர்ந்த எம்பியான டெம்ஜென் இம்னா அலோங் தனது பகடியான ட்வீட்களுக்கு பெயர்போனவர். நாகலாந்து உயர் கல்வித்துறை மற்றும் பழங்குடி மேம்பாட்டு துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார் டெம்ஜென் இம்னா அலோங். சமூக விஷயங்கள் குறித்தும் தன்னம்பிக்கை அளிக்கும் விஷயங்கள் பற்றியும் நகைச்சுவையுடன் இவர் ட்வீட் செய்வது வழக்கம். இதனாலேயே இவரை இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

குறிப்பாக பொது வெளியில் தான் ஒரு சிங்கிள் எனவும் நகைச்சுவையுடன் அவர் பல முறை குறிப்பிட்டிருக்கிறார். முன்னதாக உலக மக்கள் தொகை தினத்தில் அவர் செய்திருந்த ட்வீட் சிங்கிள்கள் மத்தியில் பெரும் வைரலானது. அந்த பதிவில்,"உலக மக்கள்தொகை தினத்தையொட்டி, மக்கள்தொகைப் பெருக்கத்தின் பிரச்சினைகளில் விழிப்புணர்வோடு இருப்போம் மற்றும் குழந்தைப் பேறு குறித்த அடிப்படை அறிவை வளர்த்துக்கொள்வோம். இல்லையென்றால் என்னைப் போலவே சிங்கிளாக இருந்தும் எதிர்காலத்திற்கு பங்களிப்பு செய்ய முடியும். இன்றே சிங்கிள்-களின் இயக்கத்தில் சேருங்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார் டெம்ஜென் இம்னா அலோங்.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில், காதலர் தினமான நேற்று டெம்ஜென் இம்னா அலோங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார். அந்த பதிவில்,"சுதந்திரத்தின் பரிசு என்பது எல்லோருக்குமானது அல்ல. நம்முடைய தினத்தை நாம் கொண்டாடுவோம். ஹெய்ல் சிங்கிள்ஸ்" எனக் குறிப்பிட்டுள்ளார். அதனுடன் தன்னுடைய புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில் "சிங்கிள்களுக்கு என தனியாக ஒரு தினம் வேண்டும்" எனவும் "சிங்கிள்களுக்கான சங்கம் அமைக்க வேண்டும்" எனவும் நெட்டிசன்கள் அந்த பதிவில் கமெண்ட் செய்தும் வருகின்றனர்.

Also Read | "சேவை தான் முக்கியம்".. இந்திய ராணுவ வீரரை துருக்கிக்கு அனுப்பி வைத்த கர்ப்பிணி மனைவி.. குழந்தைக்கு பெயர் தான்.. நெகிழ வச்ச தம்பதி..!

NAGALAND MINISTER, TEMJEN IMNA ALONG, NAGALAND MINISTER TEMJEN IMNA ALONG

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்