நாகலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம்...! நடந்தது என்ன? - உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த உறுதி...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கோஹிமா: நாகலாந்தில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த பாதுகாப்பு படையினர், வேனில் வந்த தொழிலாளர்களை கிளர்ச்சியாளர்கள் எனக்கருதி தவறுதலாக  துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில்    அப்பாவி பொதுமக்கள்   13 பேர் உயிரிழந்தனர், இந்த சம்பவம் தொடர்பாக உயர் மட்ட அளவிலான சிறப்பு விசாரணைக்குழு விரிவான விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வழி செய்யும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.

Advertising
>
Advertising

நாகலாந்து மாநிலத்தில் மியான்மர் எல்லை பகுதியில் இருக்கும் மோன் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வெளிவந்த தகவலால் பாதுகாப்புப் படையினர் அங்கு அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதோடு, நேற்று (05-12-2021) ஓடிங்-திரு கிராமப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவல் காரணமாக பாதுகாப்புப் படையினர் ஓடிங்-திரு கிராமத்திற்கு சென்றுள்ளனர். அப்போது ஓடிங்-திரு கிராமத்தை சேர்ந்த மக்கள், ஒரு நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி விட்டு வேன் ஒன்றில் வீடு திரும்பி கொண்டிருந்த போது பாதுகாப்பு படையினர் அந்த வேனில் பயங்கரவாதிகள் இருக்கிறார்கள் எனக் கருதி அவர்கள் மீது  துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கி சூட்டில் வேனில் இருந்த 13 அப்பாவி பொதுமக்கள் சம்பவ இடத்தில் மரணமடைந்தனர். பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டு ஆத்திரமடைந்த அடைந்த அப்பகுதி மக்கள் பாதுகாப்புப் படையினரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்த முயற்சித்ததாக தெரிகிறது.

பொதுமக்கள் தாக்குதலில் ஈடுபட்ட போது தற்பாதுகாப்புக்காக பாதுகாப்புப் படையினர் மக்களை நோக்கி சுட்டதாகவும், இதில் மேலும் கிராம மக்கள் 7 பேர் காயமடைந்துள்ளதாகவும், வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் கூறபடுகிறது. அதோடு, பாதுகாப்புப் படையினரின் மூன்று வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவே அதிர்ந்த இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நாகலாந்து முதல்வர் நைபியு ரியோ கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 'உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என்னுடைய இரங்கல்களை தெரிவித்து  கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடை வேண்டும். உயர் மட்ட அளவிலான சிறப்பு விசாரணைக்குழு  விசாரணை செய்து சட்டத்தின்படி நீதி வழங்கும். மக்கள்  மீண்டும் கோபமடையாமல் அமைதி காக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்துள்ளார்.

அதோடு, இந்த சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறும் போது, 'யாரும் எதிர்பாராத இந்த சம்பவம் குறித்து கேள்வி பட்டு வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மாநில அரசு  நியமித்துள்ள உயர் மட்ட அளவிலான சிறப்பு விசாரணைக்குழு விரிவான விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வழி செய்யும்' என தெரிவித்துள்ளார்.

மேலும் ராணுவ தரப்பில் இருந்தும் இந்த கோர தாக்குதல் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் 'நாகாலாந்து, மோன் மாவட்டம், ஓடிங்-திரு பகுதியில் நடத்தப்பட்ட  துரதிர்ஷ்டவசமான இந்த சம்பவம் ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது.

இந்த சம்பவத்தில் உயிரிழப்புக்கான காரணம் குறித்து உயர் மட்ட விசாரணை நடத்தப்பட்டு, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' அந்த அறிக்கையில் கூறபட்டுள்ளது. மேலும் பல பாதுகாப்பு படையினர் காயம் அடைந்ததாகவும், 1 வீரர் உயிரிழந்துள்ளதாகவும் இந்த அறிக்கையில் உறுதிப்படுத்தபட்டுள்ளது. மேலும், தற்போது இது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

TERRORISTS, NAGALAND, SHOT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்