வரலாற்றிலேயே முதல்முறை.. நாகாலாந்து சட்டமன்ற தேர்தலில் வெற்றி மகுடம் சூடிய இரு பெண்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாகாலாந்து சட்டமன்ற தேர்தலில் வரலாற்றிலேயே முதன்முறையாக இரு பெண்கள் தேர்தலில் வெற்றிபெற்று உள்ளனர். இது அம்மாநில மக்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | களைகட்ட இருக்கும் ஐபிஎல்.. சென்னை வந்தார் CSK கேப்டன் MS தோனி.. வீடியோ.!
தேர்தல்
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களுக்கு அண்மையில் தேர்தல் நடந்து முடிந்தன. திரிபுராவில் கடந்த மாதம் 16 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மேகாலயா மற்றும் நாகாலாந்தில் கடந்த மாதம் 27 ஆம் தேதி தேர்தல் நடந்தது.
நாகாலாந்து மாநிலத்தை பொறுத்தவரையில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக. ஒரு இடத்தில் போட்டியின்றி வெற்றி பெற்றது. இதனால் 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி (NDPP) இந்த முறையும் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தது. இதில் NTPP 40 தொகுதியிலும் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டன. இதில் பாஜக கூட்டணி வெற்றிபெற்று இருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
முதன்முறையாக
இந்த சூழ்நிலையில் முதன்முறையாக நாகாலாந்து மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் இரு பெண்கள் தேர்வாகியுள்ளனர். மேற்கு அங்கமி தொகுதியில் போட்டியிட்டு சல்ஹூதுவோனுவோ க்ரூஸ் வெற்றி பெற்றிருக்கிறார். அதேபோல ஹெகானி ஜகாலு திமாபூர் மூன்றாம் தொகுதியில் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார்.
நாகலாந்து தனிமாநிலமாக உருவான பிறகு இதுவரை நடந்த சட்டமன்ற தேர்தல்களில் பெண் வேட்பாளர்கள் வெற்றிபெற்றது கிடையாது. இந்த சூழ்நிலையில் சல்ஹூதுவோனுவோ க்ரூஸ் மற்றும் ஹெகானி ஜகாலு வெற்றிபெற்று வரலாற்றை மாற்றி எழுதியிருக்கின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
சல்ஹூதுவோனுவோ க்ரூஸ்
உள்ளூரில் ஹோட்டல் உரிமையாளரான க்ரூஸ், மேற்கு அங்கமி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் ஒருவரை எதிர்த்து போட்டியிட்டார். அவருக்காக அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும், நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோவும் க்ரூஸுக்காக பிரச்சாரம் செய்தனர். ஜகாலு டெல்லி பல்கலைக்கழக பட்டதாரி மற்றும் அங்கு ஆசிரியராக உள்ளார்.
ஹெகானி ஜகாலு
அமெரிக்காவில் படித்த வழக்கறிஞரான ஜகாலு, சமூக தொழில்முனைவோர் மற்றும் யூத்நெட்டின் நிறுவனர் ஆவார். சர்வதேச மகளிர் தினத்தன்று ராஷ்டிரபதி பவனில் இந்திய ஜனாதிபதியிடமிருந்து நாரி சக்தி புரஸ்கார் விருதையும் பெற்றுள்ளார். இளைஞர் மேம்பாடு, பெண்கள் அதிகாரமளித்தல், சிறுபான்மையினர் உரிமைகள் ஆகியவற்றுக்காக செயல்பட இருப்பதாக ஜகாலு தெரிவித்திருக்கிறார்.
Also Read | தனது எனர்ஜி டிரிங்கை ரசிகர் கையில் கொடுத்து அழகு பார்த்த சிராஜ்.. வைரலாகும் வீடியோ!!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கிச்சன் ஒரு நாட்டுல, ஹால் இன்னொரு நாட்டுல.. வீட்டுக்கு நடுவே செல்லும் சர்வதேச எல்லை.. இந்தியாவுல இப்படி ஒரு கிராமமா..?
- "சிங்கிளாகவே இருங்க".. இளைஞர்களுக்கு அட்வைஸ் கொடுத்த எம்பி.. மேட்ரிமோனி நிறுவன தலைவர் போட்ட ட்வீட்.. அதுக்கு அவர் கொடுத்த ரிப்ளை தான் செம்ம..!
- இதை எங்களால நம்பவே முடியல.. ஆச்சர்யத்தில் ஆராய்ச்சியாளர்கள் - இந்தியாவில் மீண்டும் தென்பட்ட அரியவகை உயிரினம்..!
- நாகலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம்...! நடந்தது என்ன? - உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த உறுதி...!
- என்னங்க சொல்றீங்க...? 'பேரக்குழந்தைகளே மொத்தம் 126 பேர் இருக்காங்க...' - 90'ஸ் கிட்ஸ்-க்கு 'இடி' விழுற மாதிரி ஒரு செய்தி...!
- இந்தியாவில் கொரோனாவுக்கு ‘டிமிக்கி’ கொடுத்த ஒரே மாநிலம்.. இதுவரை யாருக்குமே பாதிப்பு இல்லையாம்..!
- 'சொந்த ஊருக்கு வர வேண்டாம்... ஒருவருக்கு ரூ 10,000'... புதிய பாதிப்பைத் தடுக்க... 'அதிரடி' திட்டத்தை அறிவித்துள்ள 'மாநிலம்!'...