VIDEO: 'இந்த வகை N-95 மாஸ்க் யாரும் யூஸ் பண்ணாதீங்க...' 'இது அணியுறது ஆபத்து...' - மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சுவாசக் குழாய் உள்ள N 95  (valved respirator N-95 masks) முகக் கவசம் அணிவதால் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியாது. இந்த வகை முகக்கவசங்கள் கொரோனா வைரஸை தடுக்க உதவாது, மேலும் தீங்கு விளைவிக்க கூடியது என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இயக்குநர்  ராஜிவ் கார்க் மாநில சுகாதாரத்துறை செயலர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,''சுவாசக் குழாய் உள்ள N - 95 முகக் கவசங்கள் (valved respirator N-95 masks) அணிவதால் எந்தவித பயனும் இல்லை என்பதை தற்போது கண்டறிந்துள்ளோம். கொரோனா வைரஸ் பரவலை இந்த வகை N - 95 முகக் கவசங்களால் தடுத்து நிறுத்த முடியாது என்பதை உங்களது கவனத்துக்குக் கொண்டுவருகிறேன். பொதுமக்களும் சுகாதாரத்துறை ஊழியர்களும் தகுந்த முகக் கவசங்களைப் பயன்படுத்தவேண்டும் என்பதை அனைவருக்கும் அறிவுறுத்துங்கள்" என்று கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக வீட்டைவிட்டு வெளியே செல்லும் போது, போது முகக்கவசங்களை அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டதால் , மக்கள் பருத்தித் துணியால் ஆன முகக் கவசங்களையும் N - 95 முகக் கவசங்களையும் அணியத் தொடங்கினர். N - 95 முகக் கவசங்கள் மருத்துவர்களுக்குக் கூடக் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவி வந்தது. ஆனால், தற்போது வால்வு உள்ள N - 95 முகக்கவசங்களையும் மக்கள் அணிகின்றனர். இதனால், எந்த பலனும் இல்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
மேலும், வாய், மூக்கு ஆகியவை முழுவதுமாக மூடியிருக்கும் விதத்தில் எந்த விதமான துணியால் தயாரிக்கப்பட்ட முகக் கவசங்களையும் பயன்படுத்தலாம். ஆனால், ஒவ்வொரு முறையும் முகக் கவசத்தைப் பயன்படுத்திய பிறகு சுடுதண்ணீரில் ஊறவைத்து கட்டாயம் துவைக்க வேண்டும். முகக்கவசத்தை அணிவதற்கு முன்பு கைகளைச் சோப்பு போட்டு நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் ஒருவர் பயன்படுத்திய முகக்கவசத்தை மற்றொருவர் பயன்படுத்தக்கூடாது ''என்றும் மத்திய சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்