வானத்தில் திடீரென விழுந்த மர்ம பொருள்.. “ஒருவேளை இது அதுவா இருக்குமோ?”.. பீதியில் கிராம மக்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

விண்வெளியில் இருந்து வந்த உலோக பந்து ஒன்று குஜராத்தில் விழுந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | 2 ஃபேன், பல்பு இருக்குற குடிசை வீட்டுக்கு ‘கரெண்ட் பில்’ இவ்ளோவா.. ஷாக் ஆன பெயிண்டர்..!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் பலேஜ், கம்போலாஜ் மற்றும் ராம்புரா ஆகிய மூன்று இடங்களில் விண்வெளியில் இருந்து மர்ம உலோக பந்துகள் விழுந்துள்ளன. பெரும் சத்தத்துடன் விழுந்த அந்த உலோக பந்துகளை பார்த்து மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனை அடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

விண்வெளியில் இருந்து விழுந்த அந்த பொருள் சுமார் 5 கிலோ எடையுள்ள ஒரு பெரிய கருப்பு உலோக பந்தாக உள்ளது. இந்த மர்ம பொருள் விழுந்த மூன்று கிராமங்களும் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளன. இதனால் அக்கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.

இந்த நிலையில் அந்த பொருளை மீட்ட போலீசார், தடய அறிவியல் ஆய்வகத்தில் விசாரணைக்காக கொண்டு சென்றுள்ளனர். இந்த உலோகப் பந்து செயற்கைக்கோள் குப்பையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல் உலோக பந்து நேற்று மாலை 4.45 மணியளவில் விழுந்துள்ளது. பின்னர் சிறிது நேரத்தில் மற்ற 2 இடங்களிலும் இது போன்ற உலோக பந்துகள் விழுந்துள்ளன.

பலேஜ் மற்றும் ராம்புரா ஆகிய இரண்டு இடங்களில் திறந்த வெளியில் விழுந்த இந்த உலோக பந்து, காம்போலாஜில் மட்டும் ஒரு வீட்டின் மீது விழுந்துள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து கூறிய அப்பகுதி மக்கள், இது திடீரென வானத்தில் இருந்து சத்தத்துடன் ஒரு பொருள் விழுந்ததாகவும், இது என்னவென்று தங்களுக்கு தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

MYSTERY SPACE DEBRIS, GUJARAT, உலோக பந்து, குஜராத் மாநிலம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்