புயலால் கொந்தளிச்ச கடல்.. கொஞ்ச நேரத்துல கரையொதுங்கிய தங்க நிற தேர்.. ஆந்திராவில் பரபரப்பு..வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆந்திர மாநிலத்தில் தங்க நிறம் கொண்ட தேர் ஒன்று கடலில் கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | யம்மாடி..உலகத்தின் மிக உயரமான மரம்.. பழம் பறிக்கனும்னா ராக்கெட்ல தான் போகணும்..! எங்க இருக்கு?

அசானி புயல்

தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய புயல் உருவாகிய நிலையில், இந்தப் புயலுக்கு அசானி என்று பெயரிடப்பட்டிருந்தது. இந்தப் புயலால் ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் இந்தப் புயல் காரணமாக, ஆந்திராவின் கடற்பகுதி சீற்றத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வுமையம் எச்சரிந்திருந்தது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

தங்க தேர்

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுலம் மாவட்டத்தில் உள்ள சுன்னப்பள்ளி துறைமுகம் அருகே அசானி புயல் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லாத நிலையில், கடலில் வினோதமாக ஒரு பொருள் தென்படுவதை அங்கிருந்த மக்கள் பார்த்திருக்கின்றனர். கடல் கொந்தளிப்பின் காரணமாக கரைக்கு வந்ததற்கு பிறகு தான் அது ஒரு தேர் எனத் தெரியவந்திருக்கிறது. மேலும், இந்த தேர் தங்க நிறத்தில் இருந்தது பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.

விசாரணை

தங்க நிறத்தினாலான தேர் கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தவே துறைமுகத்திற்கு விரைந்துவந்த காவல்துறை அதிகாரிகள் இதுகுறித்த விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபற்றி பேசிய காவல் உதவி ஆய்வாளர் நௌபாதா," இது வெளிநாடு ஒன்றிலிருந்து வந்திருக்கலாம். இதுகுறித்து உளவுத்துறை மற்றும் மேலதிகாரிகளுக்கு தகவல் கொடுத்திருக்கிறோம்" என்றார்.

அசானி புயல் காரணமாக ஆந்திராவுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், அம்மாநில துரைமுகத்தில் தங்க நிறத்தினாலான தேர் கரை ஒதுங்கிய சம்பவம் தற்போது இந்தியா முழுவதும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

ANDHRA PRADESH, GOLD COLOURED CHARIOT, CYCLONE ASANI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்