“யாரும் அப்செப்ட் பண்ணிக்காத ஒரு துறையில் இருந்து வந்த எனக்கு..” — Bigg Boss-ல் பங்குபெற்றது குறித்து சன்னி லியோன் உருக்கம் | Sunny Leone

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சன்னி லியோன் நடிக்கும் ஹாரர் காமெடி  திரைப்படம்  “ஓ மை கோஸ்ட்” (OMG). VAU MEDIA ENTERTAINMENT மற்றும் WHITE HORSE STUDIOS  சார்பில்  D.வீரா சக்தி & K. சசிகுமார் வழங்கும், இந்த படம் தற்போது வெளியாகியுள்ளது.

“யாரும் அப்செப்ட் பண்ணிக்காத ஒரு துறையில் இருந்து வந்த எனக்கு..” — Bigg Boss-ல் பங்குபெற்றது குறித்து சன்னி லியோன் உருக்கம் | Sunny Leone
Advertising
>
Advertising

Also Read | "விராட், ரோகித்தால மட்டும் உலக கோப்பைய ஜெயிக்கவே முடியாது".. ஸ்ட்ராங்கா கபில் தேவ் சொன்ன வார்த்தை!!

இப்படத்தில் சன்னி லியோனுடன் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா முக்கிய பாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை, ஜி.பி.முத்து ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். ஜாவித் ரியாஸ் இசையமைக்க, தரன் குமார் பினணி இசையமைக்கிறார். தீபக் D.மேனன்  இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

my aim was bigg boss once Sunny Leone Exclusive

இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் சேன்லில் ரசிகர்கள் முன்னிலையில் பிரத்தியேக நேர்காணலில் பங்குபெற்ற சன்னி லியோன், பல்வேறு சுவாரஸ்ய கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார்.

இதில் “இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து எங்கேயாவது ஒரு இடத்தில் வருத்தப்பட்டது உண்டா?” என கேட்கப்பட்டதற்கு, பதில் அளித்த சன்னி லியோன், “இல்லை. இல்லை எப்போதும் இல்லை. உங்களுக்கு தெரியாத ஒரு விஷயம் சொல்றேன். அந்த நேரத்தில் என் வாழ்க்கை லட்சியம் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவது தான். ஓரிரு நாட்களாவது பிக்பாஸ் வீட்டில் இருக்க வேண்டும் என்பதையே நான் விருபினேன்.

இந்திய அளவில் பிரபலமான டிவி சேனலில் அமெரிக்காவில் இருந்து வந்து சன்னி லியோன் பங்கேற்கிறார்,  அதுவும் பலரால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தொழில்துறையில் பின்னணியில் இருந்து வந்து  அதுதான் எனது மிகப்பெரிய தொடக்கமாக இருந்தது, இந்தியாவில், பாலிவுட் திரையுலகம்,  டிவி சேனலில் அடியெடுத்து வைப்பது பெரிதாக இருந்தது. பாருங்கள்.. இப்போது நான் உங்கள் முன் அமர்ந்திருக்கிறேன்.” என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

Also Read | "கால் வைக்குற இடம் எல்லாம் கண்ணி வெடி.. வேற யாராவது இருந்தா..".. Live-ல் மனமுடைந்து பேசிய TTF வாசன்!!

SUNNY LEONE, DANIEL WEBER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்