பாலியல் வன்கொடுமை முயற்சி... எதிர்ப்பு தெரிவித்த இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்... 10 நாட்களுக்குப் பிறகு நடந்த சோகம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபீகாரில் பாலியல் வன்கொடுமை முயற்சியின்போது எரிக்கப்பட்ட இளம் பெண் 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 7-ம் தேதி நசிர்பூர் (Nazirpur) பகுதியில், இரவு நேரப் பணிக்காக, தாயார் வெளியே சென்றிருந்தநிலையில், தனது அக்காவின் குழந்தைகள் இருவருடன், 22 வயதான இளம் பெண் ஒருவர் வீட்டில் இருந்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராஜா ராய் என்பவர், முகேஷ் குமார் என்பவருடன் வந்து இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.
இதற்கு அந்தப் பெண் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த ராஜா ராய், முகேஷ் குமார் உதவியுடன் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை இளம்பெண் மீது ஊற்றி, அவரை உயிருடன் தீயிட்டு எரித்து விட்டு சென்றுள்ளார். அதன்பின்னர் 90 சதவிகித தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட இளம்பெண், முசாஃபர்பூரில் (Muzaffarpur) உள்ள ஸ்ரீகிருஷ்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அதன்பின்னர், நிலைமை மிகவும் மோசமடைந்ததால், பாட்னாவில் உள்ள அப்பல்லோ மருத்தவமனையில் கடந்த 10 -ம் தேதி இளம் பெண் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ராஜா ராய் மற்றும் அவருக்கு உதவிய முகேஷ் குமார் கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு இளம் பெண் உயிரிழந்தார். இதனால் கதறித் துடித்த பெற்றோர், மகளை கொலை செய்த குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
‘கொல்கத்தா முழுக்க போராட்டம் நடக்குது’!.. ஐபிஎல் வீரர்கள் ஏலம் நடக்குமா..? பிசிசிஐ அதிகாரி அதிரடி..!
தொடர்புடைய செய்திகள்
- ‘கணவர்’ சொன்ன வார்த்தையால்... கலங்கி துடித்த ‘மனைவி’... கடைசியில் எடுத்த ‘பகீர்’ முடிவு... பதறவைத்த சம்பவம்!
- காரும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி... கண் இமைக்கும் நேரத்தில்... ஆட்டோ டிரைவருக்கு நேர்ந்த பரிதாபம்!
- இறப்பதற்கு முன் வந்த ‘வீடியோ’ கால்... தப்பிச் சென்ற ‘மர்ம’ நபர்... ‘திருமணமான’ 3 ஆண்டுகளில் இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்...
- பின்னால் வந்த ஆட்டோ மோதி... ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்த தாய், மகள்... அரசுப் பேருந்தால் நேர்ந்த பரிதாபம்!
- ‘உதவிக்கு யாரும் இல்ல’!.. ‘தனக்குத்தானே பிரசவம் பார்த்த கர்ப்பிணி’!.. நள்ளிரவு எழும்பூர் ரயில் நிலையத்தில் பிறந்த குழந்தை..!
- கல்யாணமாகி 6 மாதம் தான்... 4 மாத கர்ப்பிணி பெண் எடுத்த விபரீத முடிவு... கதறித் துடிக்கும் தாய், தந்தை!
- பக்கத்து வீட்டுப் 'பெண்ணை'... 31 இடங்களில் ‘கத்தி’யால் குத்திய இளைஞர்... ‘கல்யாணம்’ ஆனவருக்கு நிகழ்ந்த 'கொடூரம்'!
- ‘கணவர் தம்பியுடன் சேர்ந்து பலே திட்டம்’!.. ‘சிசிடிவி-ல் காட்டிக்கொடுத்த வளையல்’.. சென்னையை அதிரவைத்த சம்பவம்..!
- ‘மாட்டுக்கு தண்ணி வைக்க போனாங்க’! ‘ஆனா இப்டி நடக்கும்னு நெனைக்கலையே’! சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!
- 16 வயது பள்ளி சிறுவனால்... 'மூதாட்டி'க்கு நேர்ந்த கொடூரம்... அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!