நான் 'வெஜிட்டேரியன்' ஆச்சே...! 'தன் பெயரில் மட்டன் ஷாப் திறந்தவருக்கு...' - சோனு சூட் எழுப்பியுள்ள கேள்வி...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதல் வெளிமாநில மக்கள் சொந்த ஊர் திரும்பவும், வாழ்வாதரங்களுக்கு கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்து இந்திய மக்கள் மனதில் நிறைந்தவர் இந்திய நடிகர் சோனு சூட். உதவுவதற்காகவே அவர் ஒரு தனி மொபைல் எண்ணையும், மொபைல் ஆப்பையும் உருவாக்கியுள்ளார்.

இவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பலர் தங்களுடைய குழந்தைகளுக்கு அவர் பெயர் சுட்டுவத்தோடு, சிலர் தான் ஆரம்பிக்கும் கடைகளுக்கும் சோனு சூட் பெயரை வைத்து அழகு பார்க்கின்றனர்.

இந்நிலையில் தனது பெயரில் ஒருவர் ஆட்டு இறைச்சிக்கடையை திறந்து விற்பனை செய்வது தொடர்பான, ஊடக செய்தியாக வெளியாகி வைரலாகியது.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சோனு சூட், 'நான் சைவ உணவு உண்பவன். என் பெயரில் ஆட்டு இறைச்சிக்கடையா? சம்பந்தப்பட்டவர் சைவ உணவு பொருட்களை விற்க நான் உதவ முடியுமா?' எனக் குறிப்பிடுள்ளார். 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்