‘பெற்ற தந்தை உடலை பெற மறுத்த மகன்’.. ‘இந்து’ முதியவருக்கு இறுதிச்சடங்கு செய்த ‘முஸ்லிம்கள்’.. நெகிழ்ச்சி சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மாரடைப்பால் மரணமடைந்த தந்தையை அடக்கம் செய்ய மகன் முன்வராத நிலையில் அவரது இறுதி சடங்கை முஸ்லிம்கள் செய்த சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertising
Advertising

மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தை சேர்ந்த 78 வயது முதியவர் ஒருவர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த தகவலை நாக்பூரில் உள்ள அவரது மகனிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் கொரோனா அச்சத்தால் தனது தந்தையின் உடலை பெற மகன் மறுத்து விட்டார். இந்த தகவலை அறிந்த அகோலா குச்சி மேமன் ஜமா அத் முஸ்லிம் அமைப்பினர், முதியவரின் உடலை பெற்று இறுதி சடங்கு செய்ய முன்வந்தனர். இறந்த முதியவர் இந்து என்பதால், அவரது இறுதி சடங்கை இந்து முறைப்படியே செய்தனர்.

இதுகுறித்து தெரிவித்த ஜமா அத் தலைவர் ஜாவேத் ஜகேரியா, ‘ஊரடங்கு நேரத்தில் இறந்தவர்களின் உடலை பெற உறவினர்கள் மறுத்தால் அவர்களுக்கு இறுதி சடங்கு செய்ய வேண்டும் முடிவெடுத்தோம். இதுவரை கொரோனா நோயால் இறந்த 21 பேர் உட்பட 60 பேருக்கு இறுதி சடங்கு செய்துள்ளோம். அதில் 5 பேர் இந்துக்கள்’ என தெரிவித்தார். மாரடைப்பால் உயிரிழந்த தந்தையின் உடலை வாங்க பெற்ற மகனே மறுத்த நிலையில், முஸ்லிம்கள் அவருக்கு இறுதி சடங்கு செய்த மனிதாபிமான செயல் அனைவரும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்