'ஜெய் ஸ்ரீராம்' சொல்லு' ...'சிக்கிய இளைஞனின் கதி' ... 'நெஞ்சை பதைபதைக்க' வைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருட வந்தாக கூறி இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ, சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஜார்கண்ட் மாநிலம் ஹர்ஷவான் மாவட்டத்தை சேர்ந்த மக்கள், டேப்ரெஷ் அன்சாரி என்ற 24 வயது இளைஞரை கட்டி வைத்து சரமாரியாக தாக்கினார்கள். சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் பொதுமக்களிடமிருந்து அன்சாரியை மீட்டனர். இதையடுத்து கடுமையான தாக்குதலுக்கு ஆளாகியிருந்ததால், அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்கள். அன்சாரி  மீது பொதுமக்கள் அளித்த புகாரை பெற்று கொண்ட காவல்துறையினர் விசாரணையும் மேற்கொண்டு வந்தார்கள்.

இந்நிலையில் கடந்த 22ம் தேதி அன்சாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது அன்சாரி தாக்கப்படும் போது எடுக்கப்பட்ட வீடியோகள், சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு வீடியோவில் அன்சாரியை  ''ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஹனுமான்''  என கூறுமாறு வற்புறுத்தி சிலர் தாக்குகின்றனர். இந்த வீடியோகளை ஆதாரமாக கொண்டு ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதனிடையே இந்த சம்பவம் குறித்து பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர் ''தாக்கப்பட்ட அன்சாரி புனேவில் வேலை செய்து வருகிறார். ரம்ஜானுக்காக ஊருக்கு வந்த போது, தனது நண்பர்களோடு திருடுவதற்காக ஊருக்குள் வந்திருக்கிறார். ஆனால் ஊர் மக்களிடம் அன்சாரி மட்டும் சிக்கி கொள்ள, அவரது நண்பர்கள் தப்பி சென்று விட்டார்கள்'' என அவர் கூறினார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் கும்பலாக தாக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அதிலும் மத பிரிவினை பார்க்கப்பட்டு நடத்தப்படும் தாக்குதல் அதிகரித்து வருவதாக, மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

ATTACKED, JHARKHAND, JAI SHREE RAM, TABREZ ANSARI, THEFT, JAI HANUMAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்